ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
078 திருக்கேதாரம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10
பாடல் எண் : 9 பண் : நட்டபாடை

பொதியேசுமந் துழல்வீர்பொதி
    அவமாவதும் அறியீர்
மதிமாந்திய வழியேசென்று
    குழிவீழ்வதும் வினையால்
கதிசூழ்கடல் இலங்கைக்கிறை
    மலங்கவ்வரை யடர்த்துக்
கெதிபேறுசெய் திருந்தானிடங்
    கேதாரமெ னீரே
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

உலகீர், நீவிர், இறைச்சிப் பொதியாகிய உடம்பைச் சுமந்து திரிதல் ஒன்றையே செய்வீர் ; அப்பொதிதான் பயனற்று ஒழிவதை அறியமாட்டீர் ; அறிவை இழந்த வழியிலே சென்று நீவிர் குழியில் வீழ்வதும், நும் வினைப்பயனேயாம். இதனை விடுத்து, முழுதும் கடலாற் சூழப்பட்ட இலங்கைக்கு அரசனாகிய இராவணன் மெலிவடையும் படி அவனை மலையால் முன்பு நெருக்கிப் பின்பு நன்னிலையைப் பெறச்செய்து தான் அம்மலைமேல் இனிதிருந்த வனாகிய சிவ பெருமானது இடம் திருக்கேதாரமே ; அதனைத் துதி மின்கள்.

குறிப்புரை :

` வினையால் ` என்றதில் ஆல், அசைநிலை. கதி - இடம். ` கேதாரம் ` என்றதனை இரட்டுற மொழிந்து கொள்க.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
People of this world!
you wander only carrying the body which is only a mass of flesh.
you do not understand the body will become useless at the end.
it is the fruit of your actions that you fall into a pit as a result of losing intelligence.
pressing down the King of Ilaṅkai surrounded by the ocean which is always on the move.
Kētāram is the place of Civaṉ who sat unaffected granting him a better state;
praise that shrine.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
pothiyaesuma:n thuzhalveerpothi
avamaavathum a'riyeer
mathimaa:nthiya vazhiyaesen'ru
kuzhiveezhvathum vinaiyaal
kathisoozhkadal ilangkaikki'rai
malangkavvarai yadarththuk
kethipae'rusey thiru:nthaanidang
kaethaarame neerae
சிற்பி