ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
078 திருக்கேதாரம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10
பாடல் எண் : 8 பண் : நட்டபாடை

முளைக்கைப்பிடி முகமன்சொலி
    முதுவேய்களை இறுத்துத்
துளைக்கைக்களிற் றினமாய்நின்று
    சுனைநீர்களைத் தூவி
வளைக்கைப்பொழி மழைகூர்தர
    மயில்மான்பிணை நிலத்தைக்
கிளைக்கமணி சிந்துந்திருக்
    கேதாரமெ னீரே
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

உலகீர், சிறிய கையை உடைய பெண்யானைகள், துளையையுடைய கையையுடைய ஆண் யானைகட்கு உறவாய் நின்று, முகமன்கூறி, பெரிய மூங்கில்களை ஒடித்துக் கொடுத்து, சுனைகளின் நீரைத் தெளித்தலால், அவற்றின் வளைவையுடைய கையினின்றும் பொழிகின்ற மழை மிகுதியாக, மயிலும், பெண்மானும் நிலத்தைக் கிண்டுதலால் மாணிக்கங்கள் தெறிக்கின்ற, ` திருக்கேதாரம் ` என்று சொல்லுமின்கள்.

குறிப்புரை :

` சொல்லி ` என்றது, பான்மை வழக்கு. மூங்கில் இலை கள் யானைக்கு உணவாதல் அறிக. ` தூவி ` என்றது, ` தூவ ` என்பதன் திரிபு. ` மயிலும் மான்பிணையும் நிலத்தைக் கிளைக்கும் ` என்றது, கோழியும், எருதும் ஆண்டு இல்லை என்பதை விளக்கி நின்றது.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
People of this world!
female elephants which have small trunks being related to the male elephants which have small trunks being related to the male elephants which have trunks with nostrils.
speaking polite words.
breaking the old bamboos and giving them to the male elephants as food.
and sprinkle the water in many mountain springs.
as the rain increases which is poured by their cuved trunks.
as the peacock and female deer scratch up the earth.
utter the name of the shrine of Kētāram where rubies fly of in many directions.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
mu'laikkaippidi mukamansoli
muthuvaeyka'lai i'ruththuth
thu'laikkaikka'li'r 'rinamaay:nin'ru
sunai:neerka'laith thoovi
va'laikkaippozhi mazhaikoorthara
mayilmaanpi'nai :nilaththaik
ki'laikkama'ni si:nthu:nthiruk
kaethaarame neerae
சிற்பி