ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
078 திருக்கேதாரம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10
பாடல் எண் : 5 பண் : நட்டபாடை

வாளோடிய தடங்கண்ணியர்
    வலையில்லழுந் தாதே
நாளோடிய நமனார்தமர்
    நணுகாமுனம் நணுகி
ஆளாயுய்ம்மின் அடிகட்கிட
    மதுவேயெனில் இதுவே
கீளோடர வசைத்தானிடங்
    கேதாரமெ னீரே
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

உலகீர், நாட்கள் ஓடிவிட்டன ; ஆதலின், இயமன் தூதுவர் வருதற்கு முன்பு, வாள்போல இருபக்கமும் ஓடுகின்ற, அகன்ற கண்களையுடைய மகளிரது ஆசையாகிய வலையிற் சிக்காமல், இப்பொழுதே இறைவனை அடைந்து அவனுக்கு ஆளாகிப் பிழை மின்கள் ; அங்ஙனம் பிழைத்தற்கு அவனுக்கு இடமாவதுதான் யாது எனில், இங்குச் சொல்லப்பட்டு வரும் இத்திருக்கேதாரமே. அரையில் கீளுடன் பாம்பைக் கட்டியுள்ள அவனது இடம் ; ஆதலின், இதனைத் துதிமின்கள்.

குறிப்புரை :

` ஓடிய `, பின்னது முற்று, கண்ணோட்டமின்மையைக் குறிக்க, ` நமனார் ` என உயர்த்து அருளிச்செய்தார். ` அடிகட்கு ` எனப் பின்னர் வருதலின், வாளா, ` ஆளாய் ` என்றருளினார். ` அது `, பகுதிப்பொருள் விகுதி. ` அதுவே ` என்ற ஏகாரம், பிறவற்றினின்றும் பிரித்துக் கோடலின், பிரிநிலை. ` யாது ` என்பது எஞ்சிநின்றது. செய்யுளாகலின் இதுவே என்னும் சுட்டுப்பெயர் முன் வந்தது. ` இது ` என்றதன்கண் சுட்டு, ` இங்குச் சொல்லப்படுவது ` என்னும் பொருளது.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
People of this world our span of life is running fast to come to an end.
before the messengers of the god of death approach you.
without being caught in the net of love for women who have big eyes which move on both sides like the sword.
approaching god save yourselves by becoming his slaves.
if you ask, what is god`s place for saving ourselves it is only Kētāram mentioned here.
it is the place of Civaṉ who tied a cobra along with a strip of cloth used as a waist cord.
thereofore you praise it.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
vaa'loadiya thadangka'n'niyar
valaiyillazhu:n thaathae
:naa'loadiya :namanaarthamar
:na'nukaamunam :na'nuki
aa'laayuymmin adikadkida
mathuvaeyenil ithuvae
kee'loadara vasaiththaanidang
kaethaarame neerae
சிற்பி