ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
078 திருக்கேதாரம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10
பாடல் எண் : 3 பண் : நட்டபாடை

கொம்பைப்பிடித் தொருக்காலர்க
    ளிருக்கான்மலர் தூவி
நம்பன்நமை யாள்வான்என்று
    நடுநாளையும் பகலும்
கம்பக்களிற் றினமாய்நின்று
    சுனைநீர்களைத் தூவிச்
செம்பொற்பொடி சிந்துந்திருக்
    கேதாரமெ னீரே
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

உலகீர், யோகதண்டத்தை ஊன்றி, ஒருவழிப் படுத்துகின்ற உயிர்ப்பினை உடைய யோகிகள், ` இவனே நம்மை ஆள்பவன் ` என்று, நள்ளிரவிலும், பகலிலும் மந்திர ஒலியோடு மலர்களைத் தூவி விரும்பப்படுகின்ற இறைவனது, அசைதலை யுடைய ஆண் யானையின் கூட்டம் தொடர்ந்துவந்து நின்று, பல சுனை களின் நீரை இறைத்து, செம்பொன்னினது பொடியை உதிர்க்கின்ற, ` திருக்கேதாரம் ` என்று சொல்லுமின்கள்.

குறிப்புரை :

` ஒருக்கு காலர்கள் ` என்பது, குறைந்து நின்றது. கால் - காற்று ; உயிர்ப்பு. ` தூவி ` என்ற வினையெச்சம், ` நம்பன் ` என்ற வினைக் குறிப்புப் பெயர் கொண்டது. இனி, ` தூவி ` என்றதனை, ` தூவ ` எனத் திரித்து, ` சிந்தும் ` என்றதனோடு முடித்தலுமாம். ஆதல் - தொடர்ந்து வருதல். இவ்வாறன்றி, ` களிறு ` என்பது, விரித்தலாயிற்று எனலுமாம். சுனைகளது பன்மையை, நீர்மேல் ஏற்றி அருளினார். பொன்வண்ணமான மலையில் சுனை நீர்களை வலிமைப்பட இறைத்த லால், பொற்பொடிகள் உதிர்வவாயின என்க. இத் திருப்பாடலுள் ` யோகிகள் தாமும் இரவும் பகலும் வணங்குவாராக, நீவிர் வாளா பொழுது கழிக்கின்றீர் ; இது பொருந்துவதோ ` என்று அருளியவாறு.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
People of this world holding a stick as support.
some hosts of celestials who have one leg scattering flowers chanting vētic mantirams.
thinking Civaṉ will admit us into his grace the place of Civaṉ where they worship Civaṉ during midnight and day.
the herd of male elephants tied to pillars stand in a row sprinkling water from the many mountain springs.
utter the name of Tirukkētāram where the elephants after draining the water from the springs scatter power of gold.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
kompaippidith thorukkaalarka
'lirukkaanmalar thoovi
:nampan:namai yaa'lvaanen'ru
:nadu:naa'laiyum pakalum
kampakka'li'r 'rinamaay:nin'ru
sunai:neerka'laith thoovich
sempo'rpodi si:nthu:nthiruk
kaethaarame neerae
சிற்பி