ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
078 திருக்கேதாரம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10
பாடல் எண் : 10 பண் : நட்டபாடை

நாவின்மிசை யரையன்னொடு
    தமிழ்ஞானசம் பந்தன்
யாவர்சிவ னடியார்களுக்
    கடியானடித் தொண்டன்
தேவன்திருக் கேதாரத்தை
    ஊரன்னுரை செய்த
பாவின்றமிழ் வல்லார்பர
    லோகத்திருப் பாரே
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

தமிழ்ப்பாடலைப் பாடிய திருநாவுக்கரசரும், திரு ஞானசம்பந்தரும், மற்றும் எவராயினும், சிவனடியார்களுக்கு அடிய னாகி, அவர்கட்கு அடித்தொண்டு செய்பவனாகிய நம்பியாரூரன், இறைவனது திருக்கேதாரத்தைப் பாடிய, இனிய தமிழ்ப் பாடலைப் பாட வல்லவர்கள், எல்லாவற்றிற்கும் மேலுள்ள உலகமாகிய சிவ லோகத்தில் இருப்பவராவர்.

குறிப்புரை :

` மி? u2970?` ஏழனுருபு ; அஃது உருபு மயக்கமாய், நான்காவதன் பொருளைத் தந்தது. ` தமிழ் ` என்றது தாப்பிசையாய், முன்னுஞ் சென்றியையும். ` யாவர் ` என்றதன்பின், ` ஆயினும் ` என்பது வருவிக்க. ` அடியான் ` என்றது முற்றெச்சமாய், ` அடித் தொண்டன் ` என்னும் வினைக் குறிப்புப் பெயரைக் கொண்டது. ` பாவாகிய இனிய தமிழ் ` என்க. அன்றி, ` இன், சாரியை ` எனினுமாம்.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
Nampi Ārūraṉ who performs menial service to the feet of the devotees having become the slave of the devotees of Civaṉ like Nāvukkaracaṉ and Ñāṉacampantaṉ of profound knowledge of Tamiḻ or other devotees whoever they may be.
those who are able to recite the sweet Tamiḻ verses composed by him will live in the superior world of Civalōkam.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
:naavinmisai yaraiyannodu
thamizhgnaanasam pa:nthan
yaavarsiva nadiyaarka'luk
kadiyaanadith tho'ndan
thaevanthiruk kaethaaraththai
oorannurai seytha
paavin'ramizh vallaarpara
loakaththirup paarae
சிற்பி