ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
071 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 4

பிறையூருஞ் சடைமுடியெம் பெருமா னாரூர்
    பெரும்பற்றப் புலியூரும் பேரா வூரும்
நறையூரும் நல்லூரும் நல்லாற் றூரும்
    நாலூருஞ் சேற்றூரும் நாரை யூரும்
உறையூரும் ஓத்தூரும் ஊற்றத் தூரும்
    அளப்பூரோ மாம்புலியூ ரொற்றி யூரும்
துறையூருந் துவையூருந் தோழூர் தானுந்
    துடையூருந் தொழஇடர்கள் தொடரா வன்றே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

பிறை தவழும் சடைமுடிச் சிவபெருமானுடைய ஆரூர், பெரும் பற்றப்புலியூர், பேராவூர், நறையூர், நல்லூர், நல்லாற்றூர், நாலூர், சேற்றூர், நாரையூர், உறையூர், ஓத்தூர், ஊற்றத்தூர், அளப்பூர், ஓமாம்புலியூர், ஒற்றியூர், துறையூர், துவையூர், தோழூர், துடையூர், என்னுமிவற்றைத் தொழத் துன்பங்கள் தொடர மாட்டா.

குறிப்புரை :

இத்திருத்தாண்டகம், ` ஊர் ` என வருவனவற்றை வகுத்தருளிச்செய்தது. நல்லாற்றூர், நாலூர், சேற்றூர், துவையூர், துடையூர் இவை வைப்புத் தலங்கள். ஆரூர், பெரும்பற்றப்புலியூர், பேராவூர், நறையூர், நல்லூர், நாரையூர், உறையூர், ஓத்தூர், ஊற்றத்தூர், அளப்பூர், ஓமாம் புலியூர், ஒற்றியூர், துறையூர், தோழூர் இவை மேலைத் திருப்பதிகத்துட் சொல்லப்பட்டன. பெரும்பற்றப்புலியூர் - தில்லை. பிறை ஊரும் சடை முடி - பிறை தவழ்கின்ற சடைமுடி.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
Troubles will be snapped if Aaroor of our Lord in whose Matted crest the crescent floats,
Perumpatrappuliyoor,
Peraavoor,
Naraiyoor,
Nalloor,
Nallaatroor,
Naaloor,
Setroor,
Naaraiyoor,
Uraiyoor,
Otthoor,
Ootratthoor,
Alappoor,
Omaampuliyoor,
Otriyoor,
Turaiyoor,
Tuvaiyoor,
Thozhoor and Tudaiyoor Are duly hailed and adored.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
pi'raiyoorunj sadaimudiyem perumaa naaroor
perumpa'r'rap puliyoorum paeraa voorum
:na'raiyoorum :nalloorum :nallaa'r 'roorum
:naaloorunj sae'r'roorum :naarai yoorum
u'raiyoorum oaththoorum oo'r'rath thoorum
a'lappooroa maampuliyoo ro'r'ri yoorum
thu'raiyooru:n thuvaiyooru:n thoazhoor thaanu:n
thudaiyooru:n thozhaidarka'l thodaraa van'rae.
சிற்பி