ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
071 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 11

கயிலாய மலையெடுத்தான் கரங்க ளோடு
    சிரங்களுரம் நெரியக்கால் விரலாற் செற்றோன்
பயில்வாய பராய்த்துறைதென் பாலைத் துறை
    பண்டெழுவர் தவத்துறைவெண் டுறைபைம் பொழிற்
குயிலாலந் துறைசோற்றுத் துறைபூந் துறை
    பெருந்துறையுங் குரங்காடு துறையி னோடு
மயிலாடு துறைகடம்பந் துறைஆவடு
    துறைமற்றுந் துறையனைத்தும் வணங்கு வோமே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

கயிலாய மலையை எடுத்த இராவணனுடைய கரங்களும் சிரங்களும் வலிமை சிதையும் வண்ணம் தன் கால் விரலால் அழிவுண்டாக்கிய சிவபெருமான் பயின்றுறையும் பராய்த்துறை, தென்பாலைத்துறை, எழுமுனிவர் பண்டுதவம் செய்த தவத்துறை, வெண்டுறை, பசிய சோலையிடத்துக் குயில்கள் வாழும் ஆலந்துறை, சோற்றுத்துறை, பூந்துறை, பெருந்துறை, குரங்காடுதுறை, மயிலாடு துறை, கடம்பந்துறை, ஆவடுதுறை ஆகியவற்றையும் துறை என்னும் பெயர் தாங்கும் மற்றைத் திருத்தலங்களையும் வணங்குவோம்.

குறிப்புரை :

இத்திருத்தாண்டகம், ` துறை ` என வருவனவற்றை வகுத்து அருளிச்செய்தது. பராய்த்துறை, சோற்றுத்துறை, பெருந்துறை, கடம்பந்துறை, ஆவடுதுறை, இவை மேலைத் திருப்பதிகத்திற் சொல்லப்பட்டன. பாலைத்துறை, வெண்டுறை, ஆலந்துறை, குரங்காடுதுறை, மயிலாடுதுறை இவை சோழ நாட்டுத் தலங்கள். ` குரங்காடுதுறை ` என்ற பொதுமையால், வடகுரங்காடுதுறை, தென் குரங்காடுதுறை இரண்டும் கொள்க. ஆலந்துறை - அன்பிலாலந்துறை. குயில் - குயில்களை உடைய. தவத்துறை, பூந்துறை இவை வைப்புத் தலங்கள். ` தவத்துறை, ஏழு முனிவர் தவம் செய்த இடம் ` என்பது ` பண்டெழுவர் தவத்துறை ` என்பதனால் விளங்கும்.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
Paraaitthurai of the Lord who with His toe crushed The hands and the heads of him who lifted up Mount Kailas,
Paalaitthurai in the South,
Tavatthurai of the hoary Seven sages,
Vennthurai,
Aalanthurai of green groves Where kuyils sing,
Sotrutthurai,
Poonthurai,
Perunthurai,
Kurangkaaduthurai,
Mayilaaduthurai,
Katampanthurai And Aavaduthurai: these thurai-s and all other thurais We will hail and adore.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
kayilaaya malaiyeduththaan karangka 'loadu
sirangka'luram :neriyakkaal viralaa'r se'r'roan
payilvaaya paraayththu'raithen paalaith thu'rai
pa'ndezhuvar thavaththu'raive'n du'raipaim pozhi'r
kuyilaala:n thu'raisoa'r'ruth thu'raipoo:n thu'rai
peru:nthu'raiyung kurangkaadu thu'raiyi noadu
mayilaadu thu'raikadampa:n thu'raiaavadu
thu'raima'r'ru:n thu'raiyanaiththum va'nangku voamae.
சிற்பி