ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
071 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 10

நள்ளாறும் பழையாறுங் கோட்டாற் றோடு
    நலந்திகழும் நாலாறுந் திருவை யாறுந்
தெள்ளாறும் வளைகுளமுந் தளிக்குளமு நல்
    லிடைக்குளமுந் திருக்குளத்தோ டஞ்சைக் களம்
விள்ளாத நெடுங்களம்வேட் களம்நெல் லிக்கா
    கோலக்கா ஆனைக்கா வியன்கோடிகா
கள்ளார்ந்த கொன்றையான் நின்ற ஆறுங்
    குளம்களங்கா என அனைத்துங் கூறுவோமே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

நள்ளாறு, பழையாறு, கோட்டாறு, நன்மை நிலவும், நாலாறு, திருஐயாறு, தெள்ளாறு, வளைகுளம், தளிக்குளம், நல்ல இடைக்குளம், திருக்குளம், அஞ்சைக்களம், குறையாத சிறப்புடைய நெடுங்களம், வேட்களம், நெல்லிக்கா, கோலக்கா, ஆனைக்கா, பரந்து திகழும் கோடிகா என்றெல்லாம் தேன் நிறைந்த கொன்றைப் பூ மாலை அணிந்த சிவபெருமான் விளங்கும் ஆறு, குளம், களம், கா ஆகிய எல்லாவற்றையும் கூறுவோம்.

குறிப்புரை :

இத்திருத்தாண்டகம், ` ஆறு, குளம், களம், கா ` என வருவனவற்றை வகுத்து அருளிச் செய்தது. நள்ளாறு, கோட்டாறு, ஐயாறு இவை மேலைத் திருப் பதிகத்திற் சொல்லப்பட்டன. பழையாறு, நாலாறு, தெள்ளாறு இவை வைப்புத் தலங்கள். வளைகுளம், தளிக்குளம், இடைக்குளம், திருக்குளம் ஆகிய அனைத்தும் வைப்புத் தலங்கள். தளிக்குளம் - தஞ்சைத் தளிக்குளம். அஞ்சைக்களம், நெடுங்களம், வேட்களம் மூன்றும் மேலைத் திருப்பதிகத்திற் சொல்லப்பட்டன. நெல்லிக்கா, ஆனைக்கா, கோடிகா இவையும் மேலைத் திருப்பதிகத்திற் சொல்லப்பட்டன. கோலக்கா, சோழநாட்டுத் தலம்.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
We will hail every aaru,
kulam,
kalam and kaa where The Lord adorned with melliferous konrai,
abides;
Such as Nallaaru,
Pazhaiyaaru,
Kottaaru,
Naalaaru Of goodly weal,
Tiruvaiyaru,
Tellaaru,
Valaikulam,
Talikkulam,
goodly Idaikkulam,
Tirukkulam,
Anjaikkalam,
Nedungkalam,
Vetkalam,
Nellikkaa,
Kolakkaa,
Aanaikka and extensive Kodikaa.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
:na'l'laa'rum pazhaiyaa'rung koaddaa'r 'roadu
:nala:nthikazhum :naalaa'ru:n thiruvai yaa'ru:n
the'l'laa'rum va'laiku'lamu:n tha'likku'lamu :nal
lidaikku'lamu:n thirukku'laththoa danjsaik ka'lam
vi'l'laatha :nedungka'lamvaed ka'lam:nel likkaa
koalakkaa aanaikkaa viyankoadikaa
ka'l'laar:ntha kon'raiyaan :nin'ra aa'rung
ku'lamka'langkaa ena anaiththung koo'ruvoamae.
சிற்பி