ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
071 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பதிக வரலாறு :

திருவையாற்றில் கயிலைக் காட்சி கண்ட சுவாமிகள் திருநெய்த்தானம் , திருமழபாடி முதலிய தலங்களைப் பணிந்து , திருப்பூந்துருத்தி சேர்ந்து , பெருமானைப் பரிவோடு வணங்கி இருப்போந்திருவடிக்கீழ் நாம் என்னும் திருக்குறுந்தொகை முதலிய பல பதிகங்கள் அருளிச்செய்து திங்களும் ஞாயிறுந் தோயுந் திருமடம் அமைத்துத் திருத்தொண்டு செய்திருக்கும் நாள்களில் பாடியருளியவற்றுள் ஒன்று இத் திருப்பதிகம் . ( தி .12 திருநாவு . புரா . 390) குறிப்பு : இத்திருப்பதிகம் , மேலைத்திருப்பதிகத்துள் ஓதியருளியன வும் , பிறவுமாகிய தலங்களைப் பெயர் ஒற்றுமையால் வகைப்படுத்து அருளிச்செய்தது , அப்பெயர்கள்தாம் சத்தகோடி மகாமந்திரங்கள் போல ஒருபெற்றியனவான பல்வேறு முடிபுடையனவாய் இயைந்து , ஓதுவார் உள்ளத்தில் எளிதிற் பொருந்தி நின்று பயன் தருமாகலின் . சுவாமிகளும் இதனுள் பெரும்பாலும் அத்தலப் பெயர்களைச் சொல்லுதலையே வலியுறுத்தி யருளினார் . ` அடைவு , முறைமை ` என்பன ஒரு பொருட் சொற்கள் . முறைமையாவது ஒரு தன்மைப்பட்ட பொருள்கள் தொடர்ந்து வருதல் .

சிற்பி