ஐந்தாம் திருமுறை
100 பதிகங்கள், 1015 பாடல்கள், 76 கோயில்கள்
001 கோயில்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 5

ஊனில் ஆவி உயிர்க்கும் பொழுதெலாம்
நான்நி லாவி யிருப்பனென் னாதனைத்
தேன்நி லாவிய சிற்றம் பலவனார்
வான்நி லாவி யிருக்கவும் வைப்பரே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

உடம்பில் உயிர் உயிர்த்துக்கொண்டிருக்கும் காலமெல்லாம் நான் என்னை ஆளாக உடைய திருச்சிற்றம்பலவனாரை விளக்கமுறப்பெற்றிருப்பேன். இன்பத்தேன் விளங்கிய அத் திருச்சிற்றம்பலவனார் அடியேனைப் பேரின்பவீட்டில் நிலைபெற்றிருக்கவும் வைப்பர்.

குறிப்புரை :

ஊன் - உடல். ஆகுபெயர். நிலாவி - விளங்கி, நிலை பெற்று. உயிர்க்கும் பொழுது - மூச்சுவிட்டுக்கொண்டிருக்கும் காலம். நாதன் - உடையான். தேன் - சிவானந்தம். வான் - விண்ணுலகு அன்று ; சிவலோகம். ஊனில் ஆவி என்றும், ஊன் நிலாவி என்றும் பிரித்துரைக்கலாம். வானிலாவி என்புழியும் அவ்வாறே கொள்ளலாம். முதல்வன் திருவருளை மறவாதவர்க்கே பேரின்பம் எய்தும் என்பது கருத்து.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
as long as life exists in this body.
I shall meditate upon my Lord.
the Lord of Ciṟṟampalam where there are bright honey-combs.
will place me in heaven to stay there permanently if I wish it.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
oonil aavi uyirkkum pozhuthelaam
:naan:ni laavi yiruppanen naathanaith
thaen:ni laaviya si'r'ram palavanaar
vaan:ni laavi yirukkavum vaipparae.
சிற்பி