நான்காம் திருமுறை
113 பதிகங்கள், 1070 பாடல்கள், 50 கோயில்கள்
099 திருக்கச்சியேகம்பம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10
பாடல் எண் : 9

ஏன்றுகொண் டாயென்னை யெம்பெரு மானினி யல்லமென்னில்
சான்றுகண் டாயிவ் வுலகமெல் லாந்தனி யேனென்றெனை
ஊன்றிநின் றாரைவர்க் கொற்றிவைத் தாய்பின்னை யொற்றியெல்லாம்
சோன்றுகொண் டாய்கச்சி யேகம்ப மேய சுடர்வண்ணனே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

கச்சி ஏகம்பத்தில் விரும்பி உறைகின்ற ஒளி வடிவினனே ! எம் பெருமானே ! அடியேனை உன் அடியவன் என்று ஏற்றுக் கொண்ட நீ இப்பொழுது அடியேனை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று கூறினால், நீ அடியேனை ஏற்றுக் கொண்டதற்கு இவ்வுலகம் முழுதும் சாட்சி என்பதனை நினைத்துப்பார். தன் உணர்வு இல்லாதவன் என்று அடியேனைப் பற்றி நின்ற ஐம்பொறிகளுக்கும் போக்கியப் பொருளாக வழங்கிப் பின் அந்தப் போக்கியப் பொருளா யிருந்த தன்மையிலிருந்து அடியேனை மீட்டுக் கொண்டாய் என்பதனை உளம் கொள்வாயாக.

குறிப்புரை :

கச்சி ஏகம்பம் மேய சுடர் வண்ணனே, என்னை ஏன்று கொண்டாய். எனை - என்னை. என்னை என்ற பாடம் தவறு. இனி எம்பெருமான், யாம் உன்னை ஏன்று கொண்டாம் அல்லம் எனில், இவ்வுலகம் எல்லாம் ( கொண்டதற்குச் ) சான்று கண்டாய். என்னை ஐவர் ஊன்றி நின்றார். தனியேன் என்று கருதினர் அவ்வைவரும். ஊன்றி நின்ற ஐவர்க்கும் என்னை ஒற்றிவைத்தாய். பின்னை அவ்வொற்றியெல்லாம் சோன்று கொண்டாய் - சுவன்று கொண்டாய். சூன்று என்பது சோன்று என மருவும். சூன்று - தோண்டி. கைப்பற்றி என்றதாம். சுவன்று என்றதன் மரூஉவுமாகும். சுவறல் - உறிஞ்சல். சோன்று - உறிஞ்சி. ஈண்டு அஃது ஒற்றியெல்லாம் மீட்டுக் கொண்டாய் என்ற கருத்ததாயிற்று. ஒற்றி நீக்கித் தனக்கே உரிமையாக்கிக் கொள்ளலாம். கச்சி - திருக்கச்சி. ஏகம்பம் - ஏகாம்பரம். மேய - மேவிய - எழுந்தருளிய. சுடர்வண்ணன் :- ` தீவண்ணன் `. என்னை ஏற்றுக் கொண்டாய் அடிமை என்று அதனால் நீ எம்பெருமான். நான் உன் அடியேன். இனி அல்லேன் எனல் இயலாது. அல்லம் எனில், இவ்வுலகம் எல்லாம் சான்று. ஏன்றுகொண்டது மெய்மை என்பதற்குச் சான்று. சூலை நோய் தீர்த்து ஆட்கொண்டமையும் சமணர் செய்த கொடுமையனைத்தும் தாக்காதவாறு காத்தமையும் ஏன்று கொண்டதற்குத் தக்க சான்றாம். அவ்வுண்மையை உலகம் எல்லாம் அறிந்துள.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
my god!
Civaṉ who has the colour of the fire and who is the ēkampam in kacci!
you accepted me as your protege.
if you reply in the negative all the people of the world will bear witness to that.
you mortgaged me to the five organs of sense who had gained a firm footing in me, thinking me to be without any companion.
you redeened from that mortgage afterwards
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
aen'ruko'n daayennai yemperu maanini yallamennil
saan'ruka'n daayiv vulakamel laa:nthani yaenen'renai
oon'ri:nin 'raaraivark ko'r'rivaith thaaypinnai yo'r'riyellaam
soan'ruko'n daaykachchi yaekampa maeya sudarva'n'nanae.
சிற்பி