நான்காம் திருமுறை
113 பதிகங்கள், 1070 பாடல்கள், 50 கோயில்கள்
099 திருக்கச்சியேகம்பம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10
பாடல் எண் : 8

பாம்பரைச் சேர்த்திப் படருஞ் சடைமுடிப் பால்வண்ணனே
கூம்பலைச் செய்த கரதலத் தன்பர்கள் கூடிப்பன்னாள்
சாம்பரைப் பூசித் தரையிற் புரண்டுநின் றாள்சரணென்
றேம்பலிப் பார்கட் கிரங்குகண் டாய்கச்சி யேகம்பனே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

பாம்பினை இடுப்பில் இறுகக் கட்டிப் பரவிய சடை முடியை உடைய பால் நிறத்தனே ! கச்சி ஏகம்பனே ! அடியார்கள் இரு கைகளையும் குவித்துக் கொண்டு திருநீற்றைப் பூசிக்கொண்டு அடியார் குழாத்துடன் கூடிப் பலநாள்களாகத் தரையில் புரண்டு உன் திருவடிகளே தங்களுக்கு அடைக்கலம் என்று கூறிவந்து அடைந்துள்ளனர். அவர்களுக்கு நீ இரங்கி அருளுவாயாக.

குறிப்புரை :

பால்வண்ணனே, ஏகம்பனே, அன்பர்கள் கூடிப் பூசிப் புரண்டு சரண் என்று ஏம்பலிப்பார் ( கள். அவர் ) கட்கு இரங்கு. பாம்பு அரை சேர்த்தி :- அரவக்கச்சு. படரும் சடை முடியையுடைய பால் வண்ணன். கூம்பல் - குவிதல். ( கூப்பல் - குவித்தல் ) கூம்பலைச் செய்த கரம். கரதலம் - கைத்தலம் ; கையகம். கைத்தலத்தைப் பெற்ற அன்பர்கள். அன்பே கூம்பலைச் செய்த கைகளைப் பெறுவித்தது. ` கூம்பலங் கைத்தலத்தன்பர் என்பூடுருகக் குனிக்கும் பாம்பலங்காரப் பரன் ` ( தி.8 திருக்கோவையார். 11). பல்நாள் - நெடுங்காலம். சாம்பர் - திருநீறு. தரை - நிலம். நின் தாள் சரண் - உன் திருவடியே புகல் ( தி.4 ப.96 பா.9.) ஏம் பலித்தல் - வருந்தி வந்தடைதல். ஏம்பல் - ஏங்குதல். ஏம்பல் என்னும் சொல்லினின்று ஏம்பலித்தல் என்பது தோன்றிற்று. கலக்கமுமாம். சாம்பல் - சாம்பர். ( பந்தல் - பந்தர் ). ஈற்றுப் போலி.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
Civaṉ who has the colour of milk and has a spreading caṭai coiled into a crown and has tied a cobra in the waist!
The Lord in ēkampam in kacci!
your devotees join together with folded hands and smearing themselves with the sacred ash.
rolling on the ground for many days.
feel intense ardour that your feet are their refuge;
please take pity on them and grant your grace.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
paamparaich saerththip padarunj sadaimudip paalva'n'nanae
koompalaich seytha karathalath thanparka'l koodippannaa'l
saamparaip poosith tharaiyi'r pura'ndu:nin 'raa'lsara'nen
'raempalip paarkad kirangkuka'n daaykachchi yaekampanae.
சிற்பி