நான்காம் திருமுறை
113 பதிகங்கள், 1070 பாடல்கள், 50 கோயில்கள்
099 திருக்கச்சியேகம்பம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10
பாடல் எண் : 6

கருவுற்ற நாள்முத லாகவுன் பாதமே காண்பதற்கு
உருகிற்றெ னுள்ளமும் நானுங் கிடந்தலந் தெய்த்தொழிந்தேன்
திருவொற்றி யூரா திருவால வாயா திருவாரூரா
ஒருபற்றி லாமையுங் கண்டிரங் காய்கச்சி யேகம்பனே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

திருவொற்றியூரா ! திருவாலவாயா ! திருவாரூரா ! கச்சிஏகம்பனே ! அடியேன் தாயாரினுடைய கருவிலே பொருந்திய நாள்முதலாக உன் திருவடியைக் காண்பதற்கு அடியேனுடைய உள்ளம் உருகுகிறது. அடியேனும் கிடந்து வருந்தி இளைத்துச் செயலற்று விட்டேன். அடியேனுக்கு உன்னைத் தவிர வேறு அடைக்கலம் இல்லை என்பதனையும் கண்டு அடியேன்மாட்டு இரக்கம் கொள்வாயாக.

குறிப்புரை :

கரு உற்ற நாள் முதல் ஆக உன் பாதமே காண்பதற்கு என் உள்ளமும் உருகிற்று ; நானும் கிடந்து அலந்து எய்த்து ஒழிந்தேன் ; ` கருவுற் றிருந்துன் கழலே நினைந்தேன் கருப்புவியில் ` ( தி.4 ப.96 பா.5.) ` கருவாய்க் கிடந்துன் கழலே நினையுங் கருத்துடையேன் ` ( தி.4 ப.94 பா.6.) ` கருவுற்ற காலத்தே என்னை ஆண்டு கழற்போது தந்தளித்த கள்வர் போலும் ` ( தி.6 ப.89 பா.9). கருவுற்ற நாள் முதலாக உன் பாதமே காண்பதற்கு உருகியது என் உள்ளம் ; கிடந்து அலைந்து எய்த் தொழிந்தது நான் என்றதால், ` நினையாது ஒருபோதும் இருந்தறியேன் ` ` இரவும் பகலும் எப்பொழுதும் பிரியாது வணங்குவன் ` ` சலம் பூவொடு தூபம் மறந்தறியேன் ` ` தமிழோடிசை பாடல் மறந்தறியேன் ` ` நலம் தீங்கிலும் உன்னை மறந்தறியேன் உன் நாமம் என் நாவில் மறந்தறியேன் ` என்றவை முரணாகாமை உணர்க. அப்பர் எச்சமயம் புகினும் அவர் நாட்டம் எல்லாம் மெய்ப்பொருளுணர்ச்சியிலேயே ஆதலின், அப்பொருளை அவர் மறந்தாரல்லர். திருவொற்றியூரா, திருவால வாயா, திருவாரூரா என்று அம் மூன்றனையும் எண்ணிச் சிவபிரானை அழைத்தது யாது காரணத்தால் ? ஒருபற்றிலாமையும் கண்டிரங்குவாய் என்று கச்சியேகம்பனை இரந்தது , அம்மைக்குப் பேரின்ப வீடு தந்தருளியது குறித்துப்போலும். ` கடைக்கண்ணால் மங்கையையும் நோக்கா என் மேல் ஊனமது எல்லாம் ஒழித்தான் ` ( தி.6 ப.19 பா.4) ` பற்று அற்றோமே ` ( தி.6 ப.98 பா.3). ` ஒண்கழலாற்கு அல்லால் எப்பற்றும் இலன் ` ( தி.5 ப.97 பா.7). ` கொண்டீச்சுரவனார் பற்று அலால் ஒருபற்று மற்று இல்லையே ` ( தி.5 ப.70 பா.2). ` ஒற்றையேறு உடையான் அடியே அலால் பற்று ஒன்று இல்லிகள்மேற் படைபோகல் ` ( தி.5 ப.92 பா.10)

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
the Lord in ēkampam in kacci.
from that day when I was in my mothers womb.
my heart also melted to have a vision of your feet only.
I too grew completely weary suffering and lying prostrate.
the Lord in tiruvoṟṟiyūr!
the Lord in tiruvālavāy!
the Lord in tiruvārūr!
will you not take pity on me seeing that I have no other support except you?
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
karuvu'r'ra :naa'lmutha laakavun paathamae kaa'npatha'rku
uruki'r're nu'l'lamum :naanung kida:nthala:n theyththozhi:nthaen
thiruvo'r'ri yooraa thiruvaala vaayaa thiruvaarooraa
orupa'r'ri laamaiyung ka'ndirang kaaykachchi yaekampanae.
சிற்பி