நான்காம் திருமுறை
113 பதிகங்கள், 1070 பாடல்கள், 50 கோயில்கள்
099 திருக்கச்சியேகம்பம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10
பாடல் எண் : 5

உரைக்குங் கழிந்திங் குணர்வரி யானுள்கு வார்வினையைக்
கரைக்கு மெனக்கை தொழுவதல் லாற்கதி ரோர்களெல்லாம்
விரைக்கொண் மலரவன் மாலெண் வசுக்களே காதசர்கள்
இரைக்கு மமிர்தர்க் கறியவொண் ணானெங்க ளேகம்பனே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

சொற்களால் தன் பெருமையைச் சொல்ல இயலாதவனாய், மனத்தாலும் உணர்வதற்கு அரியவனாய்த் தன்னை வணங்குபவர்களுடைய வினைகளைச் செயலற்றன ஆக்குவான் என்ற கருத்தொடு கையால் தொழுவதே அல்லாமல், எங்கள் ஏகம்பப் பெருமான் பிரமன், திருமால், ஆதித்தர் பன்னிருவர், வசுக்கள் எண்மர், உருத்திரர் பதினொருவர் முதலாகத் தன்னை உரத்த குரலில் துதிக்கும் தேவர்களுக்கும் உள்ளவாறு அறிய இயலாதவன் ஆவான்.

குறிப்புரை :

எங்கள் ஏகம்பன் உணர்வரியான். கைதொழுவது அல்லால் ( எவர்க்கும் ) அறியவொண்ணான். உரைக்கும் கழிந்து இங்கு உணர்வு அரியான் :- ` உரையுணர் விறந்து நின்றுணர்வதோருணர்வே ` ( தி.8 திருவா.). உள்குவார் வினையைக் கரைக்கும் - நினைப்பவர் வினையை ஒழிப்பான். என - என்று உறுதியாகக் கருதிக் கொண்டு. கைதொழுவது அல்லால் :- கையால் மலரிட்டுத் தொழுது வழிபடும் அதனால் அல்லாமல், மற்றெதனாலும் எவர்க்கும் அறிய ஒண்ணான். கதிரோர்கள் - ஆதித்தர்ப் பன்னிருவர். மலரவன் - நான்முகன். மால் - திருமால். எண் வசுக்கள் - வசுக்கள் எண்மர். ஏகாதசர்கள் - உருத்திரர் பதினொருவர். ( கந்தபுராணம். கணங்கள் செல்.9. கூர்மபுராணம் பலவ. 14. உரை ). அமிர்தம் - அமுதுண்டுஞ் சாம் விண்ணோர். முப் பத்துமூவர் தேவருள் பன்னிருவர் கதிரோர், பதினொருவர் உருத்திரர், எண்மர் வசுக்கள் இருவர் மருத்துவர் என்பர். அமிர்தம் மருந்து எனப்படும். படவே மருத்துவர் இருவரே இதில் அமிர்தர் எனப்பெற்றனர். முப்பத்துமுக்கோடி தேவர்க்கும் முப்பத்துமூவர் தலைவர் என்பர். ( பொருட்டொகை நிகண்டு 967). ` எங்கள் ஏகம்பன் ` என்றதாலும் பிற இடம் பலவற்றுள் ஏகம்பனைத் தனிச் சிறப்பிற் கூறுதலாலும் ஆசிரியர்க்கு ஆன்மார்த்த மூர்த்தி திருவேகம்பன் எனல் புலப்படும். திருவாலவாய்ச் சொக்கநாதன் என்பாருமுளர்.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
except worshipping him with joined hands thinking that he will dissolve as salt the acts of those who meditate on him.
Civaṉ is difficult to be comprehended, being above the reach of even words which try to describe him.
our Lord in ēkampam is not easy to be comprehended by Piramaṉ who is in a fragrant lotus flower, Māl, a class of deities called eight vacukkaḷ, eleven uruttirar and celestials who lauthered after nectar.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
uraikkung kazhi:nthing ku'narvari yaanu'lku vaarvinaiyaik
karaikku menakkai thozhuvathal laa'rkathi roarka'lellaam
viraikko'n malaravan maale'n vasukka'lae kaathasarka'l
iraikku mamirthark ka'riyavo'n 'naanengka 'laekampanae.
சிற்பி