நான்காம் திருமுறை
113 பதிகங்கள், 1070 பாடல்கள், 50 கோயில்கள்
099 திருக்கச்சியேகம்பம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10
பாடல் எண் : 3

மெய்யம்பு கோத்த விசயனொ டன்றொரு வேடுவனாய்ப்
பொய்யம்பெய் தாவ மருளிச்செய் தாய்புர மூன்றெரியக்
கையம்பெய் தாய்நுன் கழலடி போற்றாக் கயவர்நெஞ்சில்
குய்யம்பெய் தாய்கொடி மாமதில் சூழ்கச்சி யேகம்பனே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

கச்சி ஏகம்பனே ! உண்மையாக அம்புகளை வில்லில் சேர்த்துப் போரிட்ட அருச்சுனனோடு அக் காலத்தில் ஒரு வேடன் வடிவினனாய்ப் பொய்யாக அம்பை வில்லில் சேர்த்து அவனோடு போரிட்டு அவனுக்கு அம்புறத் தூணியை அருளிச் செய்தவனே ! முப்புரமும் தீக்கு இரையாகுமாறு கைகளால் அம்பு எய்தவனே ! உன்னுடைய வீரக் கழல்கள் அணிந்த திருவடிகளைப் போற்றாத கயவர்களுடைய உள்ளத்தில் மாயையால் உண்மையை மறைத்தல் செய்தவனே ! குய்யம் - வஞ்சனை. ( சிந்தாமணி -253)

குறிப்புரை :

கொடிமா மதில்சூழ் கச்சியே கம்பனே, விசயனொடு அன்று ஒரு வேடுவனாய் ஆவம் அருளிச் செய்தாய் ; புரம் எரிய எய்தாய். நுன் அடி போற்றாக் கயவர் நெஞ்சில் குய்யம் பெய்தாய். மெய்யம்பு - மெய்க்கணை. விசயன் - வெற்றியன் ; அருச்சுனன். அன்று - அக்காலத்தில். ( அன்றுதல் - பகைத்தல் ). பகைத்து. அன்று வேடுவன் - பகைத்த வேடன். பொய்யம்பு - பொய்க்கணை. எய்து - செலுத்தி. எய்து ஆவம் வினைத்தொகையுமாம். அம்புறை தூணி ( அம்புறாத் தூணி ). தவவேடனான அருச்சுனன் மெய்யாக அம்பு எய்யச் சிவவேடன் பொய்யாக அம்பு எய்து ஆவம் அருளிச் செய்தான் என்றலுமாம். பாசுபதம் அருளிய வரலாறுணர்க. கையம்பு - கைக்கணை, திருமாலாகிய அம்பு. நுன் - நின் என்றதன் மரூஉ. யான் ( தன்மை ), நீன் முன்னிலை, தான் படர்க்கை. யான் - யன் - என் என்றும் நீன் - நின் - நுன் என்றும் தான் - தன் என்றும் ஆயின. பிற்காலத்தில் நுன் என்பது உன் என்று வழங்கலாயிற்று. ` உன்னை யொழிய ஒருவரையும் நம்புகிலேன் ` என்றது பழம் பாடலன்று. ஒருகை முகன் தம்பி யாகக் கொண்ட ` நின்னுடைய ` காலத்தின் பின்னது ` போற்றாக் கயவர் ` என்று அப்பரும் சிவனடியே சிந்திக்கும் திருவை எய்தாத வரைக் கயவர் எனப் பழித்தலை அறிக. குய்யம் - இரகசியம். குஹ்யம் என்றதன் மரூஉ. மறைப்பு. கயவர் அறியாவாறு கடவுள் தன்னை ஒளித்து நிற்றலே குய்யம்பெய்தல் ஆம். கச்சிமதிலும் அம்மதிலின் கொடியும் தொல் புகழ் வாய்ந்தவை.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
assuming the form of a hunter in that distant past, with Vicayaṉ who had inserted in his body arrows.
discharging an arrow, playfully you granted him a quiver.
you shot a small arrow for the three cities to burn.
you practise concealment in the minds of low people who did not worship your feet wearing kaḻal.
ēkampaṉ who is in kacci surrounded by a big wall of fortification in which flags are flown.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
meyyampu koaththa visayano dan'roru vaeduvanaayp
poyyampey thaava maru'lichchey thaaypura moon'reriyak
kaiyampey thaay:nun kazhaladi poa'r'raak kayavar:nenjsil
kuyyampey thaaykodi maamathil soozhkachchi yaekampanae.
சிற்பி