நான்காம் திருமுறை
113 பதிகங்கள், 1070 பாடல்கள், 50 கோயில்கள்
099 திருக்கச்சியேகம்பம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10
பாடல் எண் : 10

உந்திநின் றார்உன்றன் ஓலக்கச் சூளைகள் வாய்தல் பற்றித்
துன்றிநின் றார்தொல்லை வானவ ரீட்டம் பணியறிவான்
வந்துநின் றாரய னுந்திரு மாலு மதிற்கச்சியாய்
இந்தநின் றோமினி யெங்ஙன மோவந் திறைஞ்சுவதே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

மதில்களை உடைய காஞ்சி நகரில் உறைபவனே ! உன்னுடைய திருவோலக்க மண்டபத்தின் வாயிலைப் பொருந்தித் தேவலோக அரம்பையர்கள் ஒருவரை ஒருவர் நெருக்கிக் கொண்டு நிற்கிறார்கள். பழைய வானவர் கூட்டத்தினர் தமக்கு இடப்படும் திருத் தொண்டு யாது என்று அறிவதற்கு ஓலக்கத்தில் நெருக்கமாக நின்று கொண்டிருக்கிறார்கள். பிரமனும் திருமாலும் அம்மண்டபத்தில் வந்து நிற்கிறார்கள். இவ்விடத்தில் நிற்கின்ற அடியோங்கள் அவ்வளவு கூட்டம் நிரம்பிய உன் திருவோலக்க மண்டபத்தில் எங்ஙனம் வந்து உன்னைக் கண்டு வழிபடல் இயலும் ?

குறிப்புரை :

சூளைகள் - வேசிகள். அரம்பையர். உனது திருவோலக் கத்தில். உந்தி - தள்ளி. நடனம் புரிந்து எனலுமாம். தொல்லை - பழமை. வானவர் ஈட்டம் - தேவர் கூட்டம். வாய்தல் பற்றி - கடை வாயிலைப் பற்றிக்கொண்டு. துன்றி நின்றார் - நெருங்கி நின்றனர். பணி அறிவான் - கட்டளையை அறிந்து கொள்ளவேண்டி. அயனும் (- பிரமனும் ) திருமாலும் பணி அறிவான் வந்து நின்றார். மதிற் கச்சி :- கச்சி மதில் மிக்க பெருமையுடையது ; பலராலும் பல நூலிலும் புகழப்படுவது. இந்த நின்றோம் - இவ்விடத்தில் நின்ற யாம். இகரச் சுட்டின் திரிபு இந்த என்பது. அ - அந்த. உ - உந்த என்றதாலறிக. ` இந்தா ` என்பதற்கு மதுரைச் சங்கப் பதிப்பான தமிழ்ச் சொல்லகராதியில் உள்ள விளக்கத்தைக் காண்க. இந் நின்றோம் என்றதாம். இனி வந்து இறைஞ்சுவது எங்ஙனமோ ? எங்கனமோ என்றதன் மரூஉவே எங்ஙனம் என்பது. அங்ஙனம் முதலிய சுட்டுமுதற் சொற்களும் யாங்ஙனம் என்பதும் மரூஉ மொழியே. சிந்தாமணி. கந்தபுராணம் முதலியவற்றில் எதுகைத் தொடரில் அமைந்த பாக்களாலும் அவ் வுண்மையை அறியலாம்.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
Lord in kacci which has a wall of fortification!
the prostitutes were thrusting forward who were in your audience.
the old celestials were standing in groups close to one another standing at the entrance.
Ayaṉ and tirumāl were standing coming near you to know the services they should do to you.
how could these people who are standing here, pay obescince to you now.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
u:nthi:nin 'raarun'ran oalakkach soo'laika'l vaaythal pa'r'rith
thun'ri:nin 'raarthollai vaanava reeddam pa'niya'rivaan
va:nthu:nin 'raaraya nu:nthiru maalu mathi'rkachchiyaay
i:ntha:nin 'roamini yengngana moava:n thi'rainjsuvathae.
சிற்பி