நான்காம் திருமுறை
113 பதிகங்கள், 1070 பாடல்கள், 50 கோயில்கள்
099 திருக்கச்சியேகம்பம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10
பாடல் எண் : 1

ஓதுவித் தாய்முன் னறவுரை காட்டி யமணரொடே
காதுவித் தாய்கட்ட நோய்பிணி தீர்த்தாய் கலந்தருளிப்
போதுவித் தாய்நின் பணிபிழைக் கிற்புளி யம்வளாரால்
மோதுவிப் பாயுகப் பாய்முனி வாய்கச்சி யேகம்பனே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

காஞ்சிபுரத்தில் ஒற்றை மாமர நிழலில் இருக்கும் பெருமானே ! அடியேனுடைய வாழ்க்கையின் முற்பகுதியில் சமணருடைய அறவுரைகளைப் பின்பற்றத்தக்கனவாக உள்ளத்தில் தெரிவித்துச் சமண சமய நூல்களை ஓதுமாறு செய்தாய். பிறகு அவர்களே என்னை அழிப்பதற்கு முயலுமாறு செய்தாய். கொடிய நோயினால் அடியேன் பிணிக்கப்பட்டிருந்த நிலையை நீக்கினாய். அடியேனுடைய உள்ளத்தில் கலந்து சமண சமயத்திலிருந்து சைவ சமயத்துக்குப் புகச் செய்தாய். உன்னுடைய திருத்தொண்டில் தவறு செய்வேனாயின் அடியேனைப் புளிய மரக்குச்சியால் அடித்துத் தண்டிப்பாயாக. நீ சர்வ சுதந்திரன் ஆதலின் நீ விரும்பியதை உகப்பதும் விரும்பாததை வெறுப்பதும் செய்வாய். அடியேனை, உன் திருவுள்ளம் எவ்வாறு உள்ளதோ அவ்வாறு நடத்துவாயாக.

குறிப்புரை :

ஓதுவித்தாய் - ஓதச்செய்தனை. முன் - இளமையில் ; அமண் சார்புறுமுன் எனலுமாம். அறவுரை - தருமசாத்திரம் ; சமண் சமயத்துத் தரும போதம். காட்டி - அறிவுறுத்தி. காதுவித்தாய் - கொல் வித்தாய். அமணரோடே சேர்வித்து, அவர் என்னைக் கொல்லுமாறு முயலச் செய்தாய் என்றவாறு. கட்ட நோய் பிணி தீர்த்தாய் :- கட்டம் - துன்பம். கலந்தருளி - என் உயிர்க்குயிராய்த் தோன்றாத் துணையாய்க் கலந்தருளி, போது வித்தாய் - சமண் சமயத்தின் நீங்கிய சைவ சமயத்திற் புகச் செய்தாய். புகுது என்பதன் மரூஉவே போது என்பது. புகுதுக - போதுக. ` போ ` முதனிலையாயின், பொருள் வேறுபடல் அறிக. நின் பணி - நின் திருவடித் தொண்டு. பிழைக்கின் - வழுவி னால். புளியம் வளாரால் - புளியமரத்தின் வளாரினால் . மோதுவிப்பாய் - மோதச் செய்வாய். ` வளாரினால் அடித்துத் தீய பந்தமும் இடுவர் ` ( சித்தியார் 2:- 15). உகப்பாய் முனிவாய் - விரும்புவாய் வெறுப்பாய். ( விருப்பும் வெறுப்பும் கொள்வாய் ). ` காயத்திடுவாய் நின்னுடைய கழற்கீழ் வைப்பாய் கண்ணுதலே ` ( தி.8 திருவாசகம் ). ` எல்லாம் பார்த்திடிற் பரிவே யாகும் இந்த நீர் முறைமை யன்றோ ஈசனார் முனிவும் என்றும் ` ( சித்தியார். 2:- 16) ` தேசநெறி நிலையாமை கண்டு அறங்கள் செய்த ` ` சரிதப் பகுதிக்கும் சமண் சமயம் புகுந்த சரிதப் பகுதிக்கும் அகச் சான்று இதிற் காண்க `. ( திரு. சி. கே. எஸ் உரை ). அறவுரை என்று நம்பிச் சென்ற அப்பர் கொன்றன்ன இன்னா செய்யப் பெற்றார் ஆதலின், ` அறவுரை காட்டிக் காதுவித்தாய் ` என்றார். உகப்பு - அமணர் செய்த கொடுமைகளின் பயன் சமண் புக்க பாவத்தின் கழுவாய் ஆதலின், அது திருவருளுவப்புணர்த்தும். முனிவு :- அக்கொடுமைகளின் ஏது ஆதலின் சிவனார் முனிவாயிற்று. அவன் முனிவின்றேல் அமணர் அது செய்ய வல்லரோ ? சூலை தந்ததும் முனிவே. துன்பங்களின் உய்ந்தது உகப்பு.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
God!
you taught works on moral instruction, making me understand them.
you were the cause for the amaṇar to put an end to my life;
by making me embrace their religion.
you cured me of my difficulties, physical ailments and mental worries.
residing within me you made me embrace caivam again.
if I commit any wrong in my service to you, you lash me with a tender twig of the tamarind tree.
you will be pleased with me.
you will be angry with me you can do anything to me.
ēkampaṉ in kacci?
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
oathuvith thaaymun na'ravurai kaaddi yama'narodae
kaathuvith thaaykadda :noaypi'ni theerththaay kala:ntharu'lip
poathuvith thaay:nin pa'nipizhaik ki'rpu'li yamva'laaraal
moathuvip paayukap paaymuni vaaykachchi yaekampanae.
சிற்பி