நான்காம் திருமுறை
113 பதிகங்கள், 1070 பாடல்கள், 50 கோயில்கள்
099 திருக்கச்சியேகம்பம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10
பதிக வரலாறு :

திருநாவுக்கரசர் காஞ்சிநகர் மறுகுட் போந்து கம்பர் செம்பொற்கோயில் குறுகினார் , திருவாயிலைப் பணிந்தெழுந்து செல்வத் திருமுன்றிலை அணைந்து , ( அக் ) கருவார் கச்சித் திரு வேகம்பர் கனகமணி மாளிகை சூழ்ந்து , செம்பொன்மாலை வல்லி தழுவக் குழைந்த மணிமேனிப் பெருவாழ்வினை முன் கண்டு இறைஞ்சிப் பேரா அன்பு பெருகினார் , கண்ணருவி மயிர்க்கால் தோறும் வரும்புளகம் ஆர்ந்த மேனிப்புறம்பு அலைப்ப , அன்பு கரைந்து என்பு உள் அலைப்ப , நயனம் பயன் பெற்றுத் திளைப்பத் திருவேகம்பரை மனத்தில் உறவைத்து எல்லாச் செந்தமிழ் மாலையும் பாடினார் . ஆர்வம் உறப்பணிந் தேத்தி ஆய்ந்த தமிழ்ச் சொல் மலரால் சார்வுறும் அம்மாலை களுள் ஒன்று இத்திருப்பதிகம் ( தி .12 அப்பர் புரா , 321 - 26).

சிற்பி