மூன்றாம் திருமுறை
126 பதிகங்கள், 1358 பாடல்கள், 85 கோயில்கள்
077 திருமாணிகுழி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 9 பண் : சாதாரி

நேடுமய னோடுதிரு மாலுமுண ராவகை நிமிர்ந்துமுடிமேல்
ஏடுலவு திங்கண்மத மத்தமித ழிச்சடையெம் மீசனிடமாம்
மாடுலவு மல்லிகை குருந்துகொடி மாதவி செருந்திகுரவி
னூடுலவு புன்னைவிரை தாதுமலி சேருதவி மாணிகுழியே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

பிரமனும், திருமாலும் இறைவனின் அடிமுடி தேடியும் உணராவகை நெருப்புப்பிழம்பாய் ஓங்கி நின்றவர் சிவபெருமான். அவர் தம் சடைமுடியில் வெண்தாமரை இதழ் போன்ற பிறைச்சந்திரனையும், ஊமத்தை, கொன்றை ஆகியவற்றையும் அணிந்து விளங்குபவர். எம் இறைவரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது, மகரந்தப்பொடி நிறைந்த மல்லிகை, குருந்து, மாதவி, செருந்தி, குரவம், புன்னை என்ற மணம் கமழும் மலர்கள் நிறைந்த திருமாணிகுழி என்பதாம்.

குறிப்புரை :

நேடும் - தேடும். அயனோடு - பிரமனுடன். ( திருமாலும் ) உணரா ( த ) வகை - உணராதவிதம். நிமிர்ந்து - (` பாதாளம் ஏழினும் கீழ் ......... பாதமலர், போதார்புனை முடியும் எல்லாப் பொருள் முடிவே ` என்ன ஓங்கிய.) முடிமேல் - தலையில். ஏடு உலவு திங்கள் - ( வெண்தாமரை ) இதழ்போல் தவழ்கின்ற பிறைச்சந்திரனையும். மதம் - மணம் வீசுகின்ற, மத்தம் - பொன்னூமத்தையையும். இதழி - கொன்றை மாலையையும். சடை - சடையையும் உடைய, ( எம் ஈசன் இடம் ஆம்.) மாடு - பக்கங்களிலே. உலவு - படர்கின்ற.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
shooting up high so that Ayaṉ who searched the feet and Ayaṉ who searched the head could not know them, as a column of fire.
the place of our Lord of the Universe who has on his caṭai on the head a crescent resembling the petal of the white lotus datura flowers and koṉṟai.
is Utavimāṇikuḻi where fragrant pollen of the mast wood tree, which moves into the bottle-flower tree, panicled golden blossomed pear-tree, creeper of the common delight of the woods, wild lime trees and jasmine that spreads on the sides, are in an abundant quantity.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
:naedumaya noaduthiru maalumu'na raavakai :nimir:nthumudimael
aedulavu thingka'nmatha maththamitha zhichchadaiyem meesanidamaam
maadulavu mallikai kuru:nthukodi maathavi seru:nthikuravi
noodulavu punnaivirai thaathumali saeruthavi maa'nikuzhiyae.
சிற்பி