மூன்றாம் திருமுறை
126 பதிகங்கள், 1358 பாடல்கள், 85 கோயில்கள்
077 திருமாணிகுழி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 8 பண் : சாதாரி

எண்ணமது வின்றியெழி லார்கைலை மாமலை யெடுத்ததிறலார்
திண்ணிய வரக்கனை நெரித்தருள் புரிந்தசிவ லோகனிடமாம்
பண்ணமரு மென்மொழியி னார்பணை முலைப்பவள வாயழகதார்
ஒண்ணுதன் மடந்தையர் குடைந்துபுன லாடுதவி மாணிகுழியே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

கயிலைமலையின் பெருமையையும், சிவ பெருமானின் அளவற்ற ஆற்றலையும் சிந்தியாது, கயிலைமலையைப் பெயர்த்தெடுத்த வலிய அரக்கனான இராவணனை அம்மலையின்கீழ் நெரித்து, பின் அவன் சாமகானம் பாட அருள்புரிந்த சிவலோக நாயகனாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது, பண்போன்று மென்மொழி பேசுபவர்களாய்ப் பருத்த கொங்கைகளையும், பவளம் போன்ற வாயையும், அழகிய ஒளிபொருந்திய நெற்றியையுமுடைய பெண்கள் கையாற் குடைந்து நீராடும் திருமாணி குழி ஆகும்.

குறிப்புரை :

எண்ணம் அது இன்றி - முன் யோசனை சிறிதும் இல்லாமல் ( துணிந்து ) எழில்ஆர் - அழகு பொருந்திய. கயிலை மா மலை - சிறந்த கயிலாயமலையை. எடுத்த - எடுக்கத் தொடங்கிய. திண்ணிய - ( இலேசில் அழிக்கமுடியாத ) வலிமை வாய்ந்த. திறல் ஆர் - திறமையுடைய. அரக்கனை - இராவணனை. நெரித்து - அடர்த்து ( பின் அருள்புரிந்த.) சிவலோகன் - சிவலோகநாயகனாகிய சிவபெருமானது .( இடம் ஆம்.) பண் அமரும் - இசை பொருந்திய. மென்மொழியின் - மெல்லெனப் பேசும் சொற்களையும். ஆர் - ( அணிகலன்கள் ) நிறைந்த. பணை - பருத்த. முலை - தன பாரங்களையும். பவளவாய் - பவளம் போன்ற வாயையும். அழகு ( அது ) ஆர் - அழகு பொருந்திய. ஒள் - ஒளிவாய்ந்த. நுதல் - நெற்றியையுமுடைய ( மடந்தையர் ). குடைந்து புனல் ஆடு - ( கையால் ) குடைந்து நீராடும், ( உதவிமாணிகுழி ).

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
the place of Civalōkam who granted his grace after crushing the valourous and strong arakkaṉ who lifted the great and beautiful mountain, Kayilai without forethought is utavi māṇikuḻi where the ladies, whose words are like melody-types, and who have large breasts beautiful lips like coral and bright foreheads, bathe in the water plunging and diving.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
e'n'namathu vin'riyezhi laarkailai maamalai yeduththathi'ralaar
thi'n'niya varakkanai :neriththaru'l puri:nthasiva loakanidamaam
pa'n'namaru menmozhiyi naarpa'nai mulaippava'la vaayazhakathaar
o'n'nuthan mada:nthaiyar kudai:nthupuna laaduthavi maa'nikuzhiyae.
சிற்பி