மூன்றாம் திருமுறை
126 பதிகங்கள், 1358 பாடல்கள், 85 கோயில்கள்
077 திருமாணிகுழி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 7 பண் : சாதாரி

எண் பெரிய வானவர்க ணின்றுதுதி செய்யவிறை யேகருணையாய்
உண்பரிய நஞ்சுதனை யுண்டுலக முய்யவரு ளுத்தமனிடம்
பண்பயிலும் வண்டுபல கெண்டிமது வுண்டுநிறை பைம் பொழிலின்வாய்
ஒண்பலவி னின்கனி சொரிந்துமண நாறுதவி மாணிகுழியே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

எண்ணற்ற தேவர்கள் வணங்கிநின்று துதிசெய்யப் பேரருளுடையவனாய் எவரும் உண்ணுதற்கரிய நஞ்சை உண்டு உலகம் உய்யும்படி அருள்செய்த உத்தமனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது, பண்ணிசை பாடுகின்ற வண்டுகள், பல மலர்களையும் கிளறி, தேனருந்த, வளம்மிக்க பசுமை வாய்ந்த சோலைகளிடத்துச் சிறந்த பலாமரங்களின் இனிய கனிகளிலிருந்து தேனைச் சொரிந்து நறுமணம் கமழ்கின்ற திருமாணிகுழி என்பதாகும்.

குறிப்புரை :

எண் பெரிய - மிக்க செருக்கையுடைய. வானவர்கள் - தேவர்கள் ( நின்று துதிசெய்ய.) இறையே - சற்று. கருணை ஆய் - கிருபை உடையவராகி. உண்பு அரிய - எவரும் உண்ணுதற்கு அரிய. ( நஞ்சுதனை உண்டு ). உலகு உய்ய அருள் உத்தமனிடம் - உலகம் உய்யும்படி அருள் புரிந்த உத்தமனாகிய சிவபெருமானது இடமாவது. பண்பயிலும் - இசையைப் பாடிக்கொண்டிருக்கும் ( வண்டு ). பல - பல மலர்களையும். கெண்டி - கிளறி. மது உண்டு - தேனைக் குடிக்க. நிறை - வளம் நிறைந்த. பைம் பொழிலின் வாய் - பசிய சோலையினிடத்து. ஒண்பலவின் - சிறந்த பலா மரங்களின். இன்கனி - இனிய கனிகள். சொரிந்து - தேனைச் சொரிந்து. மணம் நாறு - மணங்கமழ்கின்ற ( உதவி மாணிகுழியே.)

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
the place of the supreme being possessed of all moral attributes who granted his grace to save the world by consuming the poison which could not be consumed by any other god, showing a little of his grace when the esteemed great celestials like Māl, Piramaṉ and intiraṉ praised him without stopping.
is utavi maṇikuḻi where many bees which practise melody-types, work in the flowers and drink honey, in the fertile gardens where fragrance spreads as the superior jack trees shed their sweet fruits.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
e'n periya vaanavarka 'nin'ruthuthi seyyavi'rai yaekaru'naiyaay
u'npariya :nanjsuthanai yu'ndulaka muyyavaru 'luththamanidam
pa'npayilum va'ndupala ke'ndimathu vu'ndu:ni'rai paim pozhilinvaay
o'npalavi ninkani sori:nthuma'na :naa'ruthavi maa'nikuzhiyae.
சிற்பி