மூன்றாம் திருமுறை
126 பதிகங்கள், 1358 பாடல்கள், 85 கோயில்கள்
077 திருமாணிகுழி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 6 பண் : சாதாரி

மந்தமலர் கொண்டுவழி பாடுசெயு மாணியுயிர் வவ்வமனமாய்
வந்தவொரு காலனுயிர் மாளவுதை செய்தமணி கண்டனிடமாம்
சந்தினொடு காரகில் சுமந்துதட மாமலர்கள் கொண்டுகெடிலம்
உந்துபுனல் வந்துவயல் பாயுமண மாருதவி மாணிகுழியே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

மலரும் நிலையிலுள்ள மலர்களைக் கொண்டு சிவவழிபாடு செய்த பிரமசாரியான மார்க்கண்டேயனின் உயிரைக் கவரும் மனத்தோடு வந்த காலனின் உயிர் நீங்குமாறு காலால் உதைத்த நீலகண்டனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம், சந்தன மரங்கள், கரிய அகிற் கட்டைகள் இவற்றைச் சுமந்து மலையிலிருந்து விழுந்து, குளங்களில் பூத்துள்ள சிறந்த மலர்களையும் தள்ளிக் கொண்டு வரும் கெடிலநதியின் நீர் வயல்களில் பாய நறுமணம் கமழும் திருமாணிகுழி ஆகும்.

குறிப்புரை :

மந்தமலர்கொண்டு - நன்கு மலராத மலர்களைக் கொண்டு. வழிபாடுசெய்யும் - பூசனைபுரிந்த. மாணி - மார்க்கண்டேயரின். உயிர்வவ்வ மனமாய் - உயிரைக் கவரும் கருத்தோடு ( வந்த ஒரு காலன் உயிர் மாள ) உதைசெய்த - உதைத்த. மணிகண்டன் - நீலகண்டனாகிய சிவ பெருமானின் ( இடம் ஆம் ). சந்தினோடு - சந்தனமரங்களோடு. கார் அகில் - கரிய அகிற் கட்டைகளையும் ( சுமந்து மலையினின்றும் இறங்கி ) தடம் மாமலர்கள் கொண்டு - தடாகங்களிற் பூத்த சிறந்த மலர்களையும் கொணர்ந்து. கெடிலம் உந்துபுனல் - திருக்கெடில நதியின் மோதும் தண்ணீர் வயல்பாயும் - வயலிற் பாய்வதனால் எய்திய. மணம்ஆர் - வாசனை பரவுகின்ற ( உதவிமாணிகுழி ).

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
the place of Civaṉ who has a blue neck and who kicked the unequalled Kālaṉ god of death who came with the idea of taking away the life of the bachelor mārkkaṇṭeyaṉ who worshipped Civaṉ with soft and fresh flowers is Utavi Māṇikuḻi full of fragrance where the river, Keṭilam, carrying sandal wood and eagle wood and bringing in its floods very big flowers, whose rising water comes and flows into the fields.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
ma:nthamalar ko'nduvazhi paaduseyu maa'niyuyir vavvamanamaay
va:nthavoru kaalanuyir maa'lavuthai seythama'ni ka'ndanidamaam
sa:nthinodu kaarakil suma:nthuthada maamalarka'l ko'ndukedilam
u:nthupunal va:nthuvayal paayuma'na maaruthavi maa'nikuzhiyae.
சிற்பி