மூன்றாம் திருமுறை
126 பதிகங்கள், 1358 பாடல்கள், 85 கோயில்கள்
077 திருமாணிகுழி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 5 பண் : சாதாரி

மாசின்மதி சூடுசடை மாமுடியர் வல்லசுரர் தொன்னகரமுன்
நாசமது செய்துநல வானவர்க ளுக்கருள்செய் நம்பனிடமாம்
வாசமலி மென்குழன் மடந்தையர்கண் மாளிகையின் மன்னியழகார்
ஊசன்மிசை யேறியினி தாகவிசை பாடுதவி மாணிகுழியே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

சிவபெருமான் குற்றமில்லாத சந்திரனைச் சடையில் சூடியவர். வல்லசுரர்களின் பழமைவாய்ந்த திரிபுரங்களை அழித்து நற்குண நற்செய்கையுடைய தேவர்கட்கு அருள்புரிந்தவர். அப் பெருமான் வீற்றிருந்தருளும் தலம், நறுமணமிக்க மெல்லிய கூந்தலையுடைய பெண்கள், மாளிகைகளில் தங்கி அழகிய ஊஞ்சலில் ஏறியமர்ந்து இனிமையாக ஊசற்பாட்டுப்பாடி ஆடுகின்ற திருமாணி குழி ஆகும்.

குறிப்புரை :

மாசுஇல்மதி - குற்றமில்லாத சந்திரனை. சூடு - அணிந்த சடைமுடியர் - பெரிய சடாமுடியையுடையவர். வல் அசுரர் - வலிய அசுரர்களின். தொல்நகரம் - பழைய திரிபுரங்களை. முன் - அக்காலத்தில். நாசம் ( அது ) செய்து - அழித்து. ( நல்வானவர்களுக்கு அருள் செய் ). நம்பன் இடமாம் - சிவபெருமானின் இடமாம். வாசமலி - மணம் மிகுந்த. மென்குழல் மடந்தையர்கள் - மெல்லிய கூந்தலையுடைய மாதர்கள், மாளிகையின் மன்னி - மாளிகைகளில் தங்கி, அழகுஆர் - அழகு பொருந்திய. ஊசல்மிசை ஏறி - ஊசலின்மேல் ( ஏறி உகைத்து ). இனிதாக இசைபாடு - இனிமையுடையதாக ஊசற் பாட்டைப் பாடி ( ஆடுகின்ற உதவிமாணி குழியே ).

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
Civaṉ has a big caṭai coiled into a crown on which he wears a crescent without the black spot.
the place of nampaṉ Civaṉ who bestowed his grace on the good celestials, destroying the old cities of the strong acurar.
is utavi māṇikuḻi where the ladies who have very fragrant and soft tresses of hair stay in the mansions and climbing on the beautiful swing sing sweet music, appropriate to that.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
maasinmathi soodusadai maamudiyar vallasurar thonnakaramun
:naasamathu seythu:nala vaanavarka 'lukkaru'lsey :nampanidamaam
vaasamali menkuzhan mada:nthaiyarka'n maa'likaiyin manniyazhakaar
oosanmisai yae'riyini thaakavisai paaduthavi maa'nikuzhiyae.
சிற்பி