மூன்றாம் திருமுறை
126 பதிகங்கள், 1358 பாடல்கள், 85 கோயில்கள்
077 திருமாணிகுழி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 4 பண் : சாதாரி

நித்தநிய மத்தொழில னாகிநெடு மால்குறள னாகிமிகவும்
சித்தம தொருக்கிவழி பாடுசெய நின்றசிவ லோகனிடமாம்
கொத்தலர் மலர்ப்பொழிலி னீடுகுல மஞ்ஞைநட மாடலதுகண்
டொத்தவரி வண்டுக ளுலாவியிசை பாடுதவி மாணிகுழியே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

நாள்தோறும் அநுட்டானம் முதலிய நியமம் பூண்டவனாய்த் திருமால் வாமனவடிவங் கொண்டு மனத்தை ஒருமுகப்படுத்தி வழிபாடு செய்யச் சிவலோக நாயகனாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம், கொத்தாக மலர்ந்துள்ள பூக்களையுடைய சோலைகளில் சிறந்த மயில்கள் நடனமாட அதைப்பார்த்த வரிகளையுடைய வண்டுகள் நடனத்துக்கு ஒத்தவாறு இசைபாடுகின்ற திருமாணிகுழி ஆகும்.

குறிப்புரை :

நித்தம் - நாடோறும். நியமத் தொழிலனாகி - அநுட்டானம் முதலிய நியமமாய்ப் பூண்டவனாய். நெடுமால் - திருமால். குறளன் ஆகி - வாமன வடிவங்கொண்டு. மிகவும் சித்தம் ( அது ) ஒருக்கி - மனத்தை நன்கு ஒரு முகப்படுத்தி. ( வழிபாடு செய்ய ) நின்ற - இருந்த. சிவலோகன் - சிவலோக நாயகனாகிய சிவபெருமான் ( இடமாம்.) கொத்து அலர் - கொத்துக்களிலே மலர்ந்த. மலர்ப் பொழிலில் - மலர்களையுடைய சோலையில். நீடுகுல மஞ்ஞை - சிறந்த மயில்கள். நடமாடல் அது - நடித்தலை. கண்டு - பார்த்து, வரி வண்டுகள் - கீற்றுகளையுடைய வண்டுகள் உலாவி - சுற்றி. ஒத்த இசைபாடு - ஒத்த இசைகளைப் பாடுகின்ற ( உதவிமாணிகுழி ).

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
the place of Civalōkaṉ whom the tall Māl assuming the form of a dwarf and practising daily routine of religious duties, controlling the mind very strictly.
is utavi māṇikuḻi where, on seeing the superior peacocks dancing in the flower-gardens which blossom in bunches;
the bees with lines, moving to and fro hum like the music in agreement with that dance.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
:niththa:niya maththozhila naaki:nedu maalku'ra'la naakimikavum
siththama thorukkivazhi paaduseya :nin'rasiva loakanidamaam
koththalar malarppozhili needukula manjgnai:nada maadalathuka'n
doththavari va'nduka 'lulaaviyisai paaduthavi maa'nikuzhiyae.
சிற்பி