மூன்றாம் திருமுறை
126 பதிகங்கள், 1358 பாடல்கள், 85 கோயில்கள்
077 திருமாணிகுழி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 3 பண் : சாதாரி

அம்பனைய கண்ணுமை மடந்தையவ ளஞ்சிவெரு வச்சினமுடைக்
கம்பமத யானையுரி செய்தவர னார்கருதி மேயவிடமாம்
வம்புமலி சோலைபுடை சூழமணி மாடமது நீடி யழகார்
உம்பரவர் கோனகர மென்னமிக மன்னுதவி மாணிகுழியே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

அம்பு போன்ற கூரிய கண்களையுடைய உமாதேவி அஞ்ச, கோபமுடைய, தூணிலே கட்டக்கூடிய மதயானையின் தோலை உரித்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம், நறுமணமிக்க சோலை களையுடையதும், இரத்தினங்கள் பதிக்கப் பெற்ற மாடமாளிகைகள் நிறைந்த அழகிய தேவலோகத்து நகரமாகிய அமராவதியைப் போன்று நிலைபெற்று விளங்குவதும் ஆகிய திருமாணிகுழியாகும்.

குறிப்புரை :

அம்பு அனைய - அம்புபோன்ற. கண் உமை மடந்தை அவள், கண்களையுடைய உமாதேவியார். அஞ்சி வெருவ - மிகவும் அஞ்ச. சினம் உடை - கோபத்தையுடைய. கம்பம் - தூணிலே கட்டக் கூடிய. யானை உரி செய்த - யானையை உரித்தருளிய. அரனார் - சிவபெருமான். கருதி - எண்ணி. மேய - மேவிய ; இடமாம். வம்புமலி - வாசனைமிக்க. ( சோலை ) புடைசூழ - சுற்ற. மணி - இரத்தினங்கள பதித்த. மாடம் - வீடுகளின் வரிசை. நீடி - உயர்ந்து. அழகு ஆர் - அழகு பொருந்திய. உம்பரவர் கோன் - தேவர்க்கு அரசனாகிய இந்திரனது. நகரம் என்ன - நகரமாகிய அமராவதி என்னும்படி. மிக மன்னு - நன்கு நிலைபெற்ற. ( உதவிமாணி குழியே ).

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
the place which Araṉār who flayed an angry elephant tied to a pillar to make the lady Umai who has eyes like the arrow, to fear and get startled, desired to dwell thinking of its importance.
is utavi māṇikuḻi which is eternal like the city of the King of the immortals which is beautiful, and where there are tall storeys set with gems, and which is surrounded on all sides by gardens which have abundance of fragrance.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
ampanaiya ka'n'numai mada:nthaiyava 'lanjsiveru vachchinamudaik
kampamatha yaanaiyuri seythavara naarkaruthi maeyavidamaam
vampumali soalaipudai soozhama'ni maadamathu :needi yazhakaar
umparavar koanakara mennamika mannuthavi maa'nikuzhiyae.
சிற்பி