மூன்றாம் திருமுறை
126 பதிகங்கள், 1358 பாடல்கள், 85 கோயில்கள்
077 திருமாணிகுழி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 11 பண் : சாதாரி

உந்திவரு தண்கெடில மோடுபுனல் சூழுதவி மாணிகுழிமேல்
அந்திமதி சூடியவெம் மானையடி சேருமணி காழிநகரான்
சந்தநிறை தண்டமிழ் தெரிந்துணரும் ஞானசம் பந்தனதுசொல்
முந்தியிசை செய்துமொழி வார்களுடை யார்கணெடு வானநிலனே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

பலபொருள்களை நீர்ப்பெருக்குடன் அடித்து வரும் கெடிலநதி சூழ்ந்த உதவி மாணிகுழியின் மீது, மாலைக்காலப் பிறைச்சந்திரனைச் சூடிய எம் தலைவனான சிவபெருமானின் திரு வடிகளை இடைவிடாது தியானிக்கும் அழகிய சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் சந்தம் நிறைந்த இன்தமிழில் அறிந்துணர்ந்து அருளிய இத்திருப்பதிகத்தை இசையுடன் பாட முற்படுபவர்கள் உயர்ந்த முத்திப் பேற்றைப் பெறுவர்.

குறிப்புரை :

உந்திவரு - பல பொருள்களை அடித்துக்கொண்டு வருகின்ற. தண் - குளிர்ச்சி பொருந்திய. கெடிலம் - கெடில நதியின். ஓடுபுனல் - ஓடும் தண்ணீர். சூழ் - சூழ்ந்த. ( உதவிமாணி குழிமேல்.) அந்திமதி சூடிய எம்மானை - அந்திக்காலத்தில் தோன்றும் பிறைச் சந்திரனை அணிந்த எம் தலைவனாகிய சிவபெருமானது. அடி - திருவடிகளை. சேரும் - இடைவிடாது தியானிக்கும். அணி - அழகிய. காழிநகரான் - சீகாழியில் அவதரித்தருளியவரும். சந்தம் நிறை - சந்தம் நிறைந்த. தண் தமிழ் - இனிய தமிழை. தெரிந்து உணரும் - அறிந்து உணர்ந்த ( ஞானசம்பந்தனது.) சொல் - சொற்களாகிய இப்பதிகத்தை. முந்தி - முற்பட. இசை செய்து - இசையைத் தொடங்கி. மொழிவார்கள் - பாடுவோர். நெடுவான நிலன் - எவற்றினும் உயர்ந்ததாகிய முத்தியுலகத்தை, உடையார் - உடைமையாகப் பெறுவர்.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
on Utavi Māṇikuḻi surrounded by the flowing water of the cool river Keṭilam which comes pushing many things.
the native of the city of beautiful Kāḻi who always meditates on the feet of our Lord who wears on his head a crescent that rises at sunset.
those who recite with music at the beginning of the day the words of Ñāṉacampantaṉ who has knowledge of refined Tamiḻ full of rhythmic movement, by research.
will obtain the extensive heaven and this world as their possession.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
u:nthivaru tha'nkedila moadupunal soozhuthavi maa'nikuzhimael
a:nthimathi soodiyavem maanaiyadi saeruma'ni kaazhi:nakaraan
sa:ntha:ni'rai tha'ndamizh theri:nthu'narum gnaanasam pa:nthanathusol
mu:nthiyisai seythumozhi vaarka'ludai yaarka'nedu vaana:nilanae.
சிற்பி