மூன்றாம் திருமுறை
126 பதிகங்கள், 1358 பாடல்கள், 85 கோயில்கள்
077 திருமாணிகுழி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 10 பண் : சாதாரி

மொட்டையம ணாதர்முது தேரர்மதி யில்லிகண் முயன்றனபடும்
முட்டைகண் மொழிந்தமொழி கொண்டருள்செய் யாதமுதல் வன்றனிடமாம்
மட்டைமலி தாழையிள நீர்முதிய வாழையில் விழுந்தவதரில்
ஒட்டமலி பூகநிரை தாறுதிர வேறுதவி மாணிகுழியே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

மொட்டைத் தலையுடைய சமணர்களும், பேதைமை முதிர்ந்த புத்தர்களும் இறையுண்மையை உணராதவர்கள். முயன்று செய்த வினைகளே பயன்தரும். அதற்குக் கர்த்தா வேண்டா என்று சொல்பவர்கள் அவர்கள். உருட்டிய வழி உருளும் முட்டைபோல் தமக்கென ஓர் உறுதி இல்லாத, அவர்கள் சொன்ன சொற்களால் அவர்கட்கு அருள்புரியாத சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, மட்டைகளையுடைய தென்னைகளின் இளநீர்கள் வாழையிலும், பாக்கு மரங்களிலும் விழுந்து குலைகள் சிதற விளங்கும் திருமாணிகுழி ஆகும்.

குறிப்புரை :

மொட்டை - மொட்டைத் தலையையுடைய. அமண் ஆதர் - சமணர்களாகிய அறிவிலிகளும். முது தேரர் - பேதைமையின் முதிர்ந்த புத்தர்களுமாகிய, மதி இல்லிகள் - புத்தியற்றவர்களும், முயன்றன படும் - முயன்று செய்த வினைகளே பயன்தரும் ( அதற்குக் கர்த்தா வேண்டா என்று சொல்லும் ) முட்டைகள் - உருட்டிய வழி உருளும் முட்டைபோல் தமக்கென ஓர் உறுதி இல்லாத அவர்கள் மொழிந்த மொழி கொண்டு - சொன்ன சொற்களால், அருள் செய்யாத - அருள் புரியாத ( முதல்வன்றனிடமாம்,) மட்டை மலி தாழை - மட்டைகளையுடைய தென்னைகளின். இளநீர் - இளநீர்கள். முதிய வாழையில் - முதிர்ந்த வாழையில். விழுந்த அதரில் - விழுந்த வழியே. ஒட்டமலி - வரிசையாக உள்ள : பூகநிரை - கமுகின் சோலைகளின். தாறு உதிர - குலைகளில் உள்ள காய்கள் உதிரும் படியாக, ஏறு - எற்றித்தாக்கும் ( உதவிமாணிகுழியே.)

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
the place of the chief who does not bestow his grace accepting the words spoken by the ignorant amaṇar who have a bald head as the hairs are removed by plucking and senior tērar buddhists whose doctrine is that the acts done by taking efforts will themselves bear fruit, who have no firm beliefs, and who have no intelligence.
is utavi māṇikuḻi where the tender fruit of the cocoanut tree which has many leave stalks falls on the mature plaintain tree, strikes against dense cluster of fruits of the areca-palm to shed and get stuck in the path.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
moddaiyama 'naatharmuthu thaerarmathi yillika'n muyan'ranapadum
muddaika'n mozhi:nthamozhi ko'ndaru'lsey yaathamuthal van'ranidamaam
maddaimali thaazhaiyi'la :neermuthiya vaazhaiyil vizhu:nthavatharil
oddamali pooka:nirai thaa'ruthira vae'ruthavi maa'nikuzhiyae.
சிற்பி