மூன்றாம் திருமுறை
126 பதிகங்கள், 1358 பாடல்கள், 85 கோயில்கள்
077 திருமாணிகுழி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 1 பண் : சாதாரி

பொன்னியல் பொருப்பரையன் மங்கையொரு பங்கர்புன றங்குசடைமேல்
வன்னியொடு மத்தமலர் வைத்தவிறல் வித்தகர் மகிழ்ந்துறைவிடம்
கன்னியிள வாளைகுதி கொள்ளவிள வள்ளைபட ரள்ளல்வயல்வாய்
மன்னியிள மேதிகள் படிந்துமனை சேருதவி மாணிகுழியே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

சிவபெருமான் பொன்மயமான இமயமலை அரசனின் மகளான உமாதேவியைத் தன்திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டவர். கங்கைநீர் தங்கிய சடையில் வன்னிப் பத்திரத்துடன் பொன்னூமத்தம் பூவை அணிந்த வலிய அறிவுருவான அச்சிவ பெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது, வரப்பின்மேல் இள வள்ளைக் கொடிகள் படர்ந்த சேற்றையுடைய வயலில், இள வாளை மீன்கள் துள்ளிப்பாய, இள எருமைகள் அதில் படிந்து வீடுசேரும், நீர்வளமும் நிலவளமுமிக்க திருமாணிகுழி ஆகும்.

குறிப்புரை :

பொன் இயல் - பொன்மயமான. பொருப்பு அரையன் - இமயமலைஅரசனது. மங்கை ஒரு பங்கர் - புதல்வியாராகிய அம்பிகையை ஒரு பாகமாக உடையவர். புனல் தங்கு சடைமேல் - கங்கை நீர் தங்கும் சடையின்மேல். வன்னியொடு - வன்னிப் பத்திரத்துடன், மத்தம் மலர் - பொன்னூமத்தைப்பூவை. வைத்த - அணிந்த. விறல் வித்தகர் - வலிய சமர்த்தராகிய சிவபெருமான். ( மகிழ்ந்து ) உறைவு இடம் - தங்கும் இடமாவது. இளவள்ளை படர் அள்ளல் வயல்வாய் - இளம் வள்ளைக் கொடிகள் ( வரப்பின்மேல் ) படர்ந்த சேற்றையுடைய வயலில். கன்னி இளவாளை - மிக்க இளமை பொருந்திய வாளைமீன்கள். குதிகொள்ள - குதித்துத் தாவும்படி. இளமேதிகள் - இள எருமைகள். மன்னி - தங்கி. படிந்து - மூழ்கி. மனைசேர் - வீட்டிற்குச் சேரும் உதவி மாணிகுழி - திருமாணி குழியென்னும் பதியேயாம். இத்தலம் ` உதவி ` என்னும் அடைமொழியோடு இணைத்தே கூறப்படுகிறதன் காரணம் விசாரித்து அறியத்தக்கது.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
the place where Civaṉ who has a lady the daughter of the mountain which is gold, and who is a strong able person, who placed on the caṭai in which water stays, leaves of indian mesquit and datura flowers, dwells with joy.
when the very young seabbard fish leap.
in the fields which are miry where the tender creeping bindweed is spreading.
young buffaloes having bathed for a long time.
is utavi māṇikuḻi where they return to their houses.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
ponniyal porupparaiyan mangkaiyoru pangkarpuna 'rangkusadaimael
vanniyodu maththamalar vaiththavi'ral viththakar makizh:nthu'raividam
kanniyi'la vaa'laikuthi ko'l'lavi'la va'l'laipada ra'l'lalvayalvaay
manniyi'la maethika'l padi:nthumanai saeruthavi maa'nikuzhiyae.
சிற்பி