இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
017 திருவேணுபுரம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 2 பண் : இந்தளம்

அரவார் கரவன் னமையார் திரள்தோள்
குரவார் குழலா ளொருகூ றனிடங்
கரவா தகொடைக் கலந்தா ரவர்க்கு
விரவா கவல்லார் வேணு புரமே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

பாம்பைக் கையில் கங்கணமாக அணிந்தவனும், மூங்கில் போன்று திரண்ட தோளினையும் குராமலர் அணிந்த கூந்தலினையும் உடைய உமையம்மையை ஒருகூறாக உடையவனும் ஆகிய சிவபிரானுக்கு இடம், மறையாதகொடையாளரும், தம்மோடு பழகியவர்களை நட்புக்கொண்டு ஒழுகுபவர்களும் ஆகிய நல்லோர் வாழும் வேணுபுரம் ஆகும்.

குறிப்புரை :

அரவு ஆர்கரவன் - பாம்பைக் கங்கணமாக அணிந்த கையினன். அமை - மூங்கிற்கணுக்களின் இடைப்பகுதியை. ஆர் - ஒத்த. திரள் - திரண்ட. குரவு - குராமலர்மாலை. `கரவாது உவந் தீயுங் கண்அன்னார்\\\\\\\\\\\\\\' (குறள் 1061). குழலாள் - கூந்தலையுடைய அம்பிகை. கூறன் - பாகத்தையுடையவன். கரவாத - மறைக்காத. கலந்தார் அவர்க்கு - கூடியவராகிய அவர்க்கு. விரவு ஆகவல்லார் - நட்பாக வல்லவர்கள் (வல்லவர்கள் வாழும் வேணுபுரம் என்க.)

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
vēṇupuram where there are people who become sympathetic towards supplicants who suffered much in their minds for donation which comes without concealing.
is the place of the Lord who has as his half a lady with tresses of hair adorned with flowers of kuravu (bottle-flower), globular shoulders like the middle portion of the bamboo, and who has a cobra in his hand [The middle portion between two joints in a bamboo is compared to a lady`s shoulders;
]
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
aravaar karavan namaiyaar thira'lthoa'l
kuravaar kuzhalaa 'lorukoo 'ranidang
karavaa thakodaik kala:nthaa ravarkku
viravaa kavallaar vae'nu puramae.
சிற்பி