இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
017 திருவேணுபுரம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 1 பண் : இந்தளம்

நிலவும் புனலும் நிறைவா ளரவும்
இலகுஞ் சடையார்க் கிடமா மெழிலார்
உலவும் வயலுக் கொளியார் முத்தம்
விலகுங் கடலார் வேணு புரமே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

பிறை, கங்கை, மிகக் கொடிய நாகம் ஆகியன விளங்கும் சடையினை உடைய சிவபெருமானுக்கு இடம், அழகிய மகளிர் உலாவுவதும், ஒளிபொருந்திய முத்துக்கள் வயல்களில் விளங்குவதும், விலகி உள்ள கடற்கரையை அடுத்துள்ளதுமான வேணுபுரம் ஆகும்.

குறிப்புரை :

நிலவு - பிறை, ஆகுபெயர். புனல் - கங்கை. நிறைவாள் - நிறைந்தகொடுமையையுடைய; சாதி அடை. இலகும் - விளங்கும். எழிலார் - அழகுடையமகளிர். எழுச்சி உடைய உழத்தியருமாம். கடல் முத்துக்கள் வயலை அடைகின்றன. வெள்ளத்தில் மிதந்த வரலாறு பற்றி, `கடலார் வேணுபுரம்\\\\\\' என்றார்.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
Vēṇupuram which floated above the sea during deluge where the bright pearls leave the sea and reach the fields where the women-folk of the farmers wander.
is the place for the god who has matted locks of hair on which the crescent moon, water and the extremely cruel cobra glitter
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
:nilavum punalum :ni'raivaa 'laravum
ilakunj sadaiyaark kidamaa mezhilaar
ulavum vayaluk ko'liyaar muththam
vilakung kadalaar vae'nu puramae.
சிற்பி