பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கங்கள், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
70 சடைய நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1
பதிக வரலாறு :

தொகை
`என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன்'
(தி.7 ப.39 பா.11)
வகை
தலம்விளங் குந்திரு நாவலூர் தன்னில் சடைய னென்னுங்
குலம்விளங் கும்புக ழோனை யுரைப்பர் குவலயத்தின்
நலம்விளங் கும்படி நாம்விளங் கும்படி நற்றவத்தின்
பலம்விளங் கும்படி ஆரூரனை முன் பயந்தமையே.'
-தி.11 திருத்தொண்டர் திருவந்தாதி பா.84
விரி
தொகை
`என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன்'
(தி.7 ப.39 பா.11)
வகை
தலம்விளங் குந்திரு நாவலூர் தன்னில் சடைய னென்னுங்
குலம்விளங் கும்புக ழோனை யுரைப்பர் குவலயத்தின்
நலம்விளங் கும்படி நாம்விளங் கும்படி நற்றவத்தின்
பலம்விளங் கும்படி ஆரூரனை முன் பயந்தமையே.'
-தி.11 திருத்தொண்டர் திருவந்தாதி பா.84
விரி
தொகை, பொ-ரை: என் தலைவனாகிய சிவபெருமானின் திரு வடியையே அடைந்த சடைய நாயனாருக்கும் அடியேன்.
தொகை, கு-ரை: இவ்வளவே இங்கு எனக்கூறப் பெறினும், `என்னவனாம் அரன்அடியே அடைந்திட்ட சடையன் இசைஞானி காதலன் திருநாவலூர்க்கோன் அன்னவனாம் ஆரூரன் அடிமை கேட்டுவப்பார்' (தி.7 ப.39 பா.11) எனப் பின் வருதலின் இவருக்கும் அடியேன் எனக் கூறினாராதல் அமையும். அடுத்துவரும் இசை ஞானியாருக்கும் இங்ஙனமே கொள்ளல் வேண்டும்.
வகை, பொ-ரை: இவ்வுலகில் நன்மைகள் விளங்கவும், நாம் அறிவு விளக்கம் பெற்று ஓங்கவும், நற்றவத்தாலாகிய பயன் விளங்க வும், ஆரூர் நம்பியாம் சுந்தரரைப் பெற்றெடுத்த பெருமைபற்றி, உலகில் சிறப்புடன் விளங்கும் திருநாவலூர்ச் சடையனார் எனும் குலம் விளங்கச் செய்த பெரியாரை அறிஞர்கள் புகழ்ந்து கூறுவர்.

சிற்பி