பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கங்கள், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
68 கோச்செங்கட்சோழ நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18
பாடல் எண் : 9

கழையார் தோளி கமலவதி
    தன்பால் கருப்ப நாள்நிரம்பி
விழையார் மகவு பெறஅடுத்த
    வேலை யதனில் காலம்உணர்
பழையார் ஒருநா ழிகைகழித்துப்
    பிறக்கு மேல்இப் பசுங்குழவி
உழையார் புவனம் ஒருமூன்றும்
    அளிக்கும் என்ன ஒள்ளிழையார்.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை :

மூங்கிலைப் போன்ற தோளையுடைய கமலவதியின் இடத்தில் கருப்பம் முற்றும் நாள் நிரம்பி, யாவரும் விரும்பி ஏற்கும் குழந்தையைப் பெறுதற்குரிய நேரத்தில், கால நிலைமை அறியும் கணிதர்கள் (சோதிடர்கள்) `ஒரு நாழிகை கழித்துக் குழந்தை பிறக்கு மாயின், இடம் அகன்ற மூவுலகங்களையும் ஆட்சி செய்யும்' என்று கூறிய அளவில், அதனால் ஒளி விளங்கும் அணியை அணிந்த அரசமாதேவியும்,

குறிப்புரை :

விழைவார் மகவு - யாவரும் விரும்பத்தக்க குழந்தை. உழையார் புவனம் ஒரு மூன்றும் - இடம் அகன்ற மூவுலகங்களும்.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
The days of pregnancy for Kamalavati whose shoulders
Were like unto bamboo, ran their course and the hour
Of delivering a desirable babe drew near; then spake
The astrologers, the knowers of threefold Time, thus:
“If the tender babe gets born a naazhikai hence, he would
In time, grow to rule and foster all the three wide worlds.”
Translation: T.N. Ramachandran

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
kazhaiyaar thoa'li kamalavathi
thanpaal karuppa :naa'l:nirampi
vizhaiyaar makavu pe'raaduththa
vaelai yathanil kaalamu'nar
pazhaiyaar oru:naa zhikaikazhiththup
pi'rakku maelip pasungkuzhavi
uzhaiyaar puvanam orumoon'rum
a'likkum enna o'l'lizhaiyaar.
சிற்பி