பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கங்கள், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
68 கோச்செங்கட்சோழ நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18
பாடல் எண் : 4

நன்றும் இழைத்த சிலம்பிவலைப்
    பரப்பை நாதன் அடிவணங்கச்
சென்ற யானை அநுசிதம்என்
    றதனைச் சிதைக்கச் சிலம்பிதான்
இன்று களிற்றின் கரஞ்சுலவிற்
    றென்று மீள இழைத்துஅதனை
அன்று கழித்த பிற்றைநாள்
    அடல்வெள் ளானை அழித்ததால்.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை :

சிலந்தி நன்றாகக் கட்டிய வாய் நூல் வலையின் பரப்பை, இறைவர் திருவடியை வணங்கச் சென்ற யானை, `இது தூய்மையற்றது' என்று அழிக்க, `இன்று யானையின் கை சுழன்றதால் அந்த வலை அழிந்தது' என்று எண்ணிச், சிலந்தி மீண்டும் அந்த வலையை அமைக்க, அதனை மறுநாள் வலிமையுடைய யானை திரும்பவும் அழித்தது.

குறிப்புரை :

அநுசிதம் - தூய்மையற்றது. சிலந்தி தன் வாயால் இழைத்தமையின் அன்னதாயிற்று. கரம் சுலவிற்று - யானையின் துதிக்கை சுழற்றப்பட்டதால் அழிந்தது யானை அதனையும் அழிக்கும் பொழுது தன் துதிக்கையைச் சுழற்றி அழிக்கும். அவ்வியல்பே ஈண்டும் கூறப்பட்டது.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
The tusker that went forth to adore the Lord’s feet,
Beholding the extensive web beautifully wrought
By the spider, deemed it as pollution and destroyed it;
The spider but thought that the tusker’s trunk made
A (fortuitous) swish which destroyed the web;
So it wove it again; on the succeeding day too
The puissant elephant destroyed it.
Translation: T.N. Ramachandran

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
:nan'rum izhaiththa silampivalaip
parappai :naathan adiva'nangkach
sen'ra yaanai a:nusithamen
'rathanaich sithaikkach silampithaan
in'ru ka'li'r'rin karanjsulavi'r
'ren'ru mee'la izhaiththuathanai
an'ru kazhiththa pi'r'rai:naa'l
adalve'l 'laanai azhiththathaal.
சிற்பி