பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கங்கள், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
68 கோச்செங்கட்சோழ நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18
பாடல் எண் : 3

ஆன செயலால் திருவானைக்
    காவென்று அதற்குப் பெயராக
ஞான முடைய ஒருசிலந்தி
    நம்பர் செம்பொன் திருமுடிமேல்
கானல் விரவும் சருகுஉதிரா
    வண்ணங் கலந்த வாய்நூலால்
மேல்நல் திருமேற் கட்டியென
    விரிந்து செறியப் புரிந்துளதால்.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை :

முற்கூறிய அத்தகைய செயலால் அத்திருப்பதிக்குத் `திருவானைக்கா\' எனப் பெயர் வழங்க, ஞானமுடைய சிலந்தி ஒன்று அவ்விறைவரின் சிவந்த பொன் மயமான திருமுடியின் மீது கதிரவ னின் வெம்மையும் உலர்ந்த சருகுகளும் படாதவாறு, தன்னுள் கலந்த வாய் நூலினால், முடிமேல் கட்டும் நல்ல மேற்கட்டி போல விரிவுடைய தாய வலையை நெருங்கச் செய்து அமைத்தது.

குறிப்புரை :

முற்பிறவியில் மாலியவான் என்னும் பெயர் உடைய சிவகணமே சிலந்தியாய்த் தோன்றி இவ்வழிபாட்டைச் செய்தலின் `ஞானமுடைய சிலந்தி\\' என்றார் ஆசிரியர். கானல் விரவும் சருகு - வெப்பமும், வெண்நாவலில் பொருந்தி இருக்கும் சருகும். மேல் - திரு முடிமேல். நல் திருமேற்கட்டி - நல்ல அழகிய மேல் விதானம். ஆல் - அசைநிலை.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
When in that flowery forest under a white naaval tree
The Lord of the flower-soft feet whose form is Truth
And who was, of yore, searched by Vishnu, manifested Himself,
A white tusker of exceeding tapas ritualistically bathed
Him with the beauteous water carried in its trunk,
Adorned Him with bunches of fragrant flowers and adored Him;
Thus it performed daily pooja to the Lord
Whose throat is dark like the blue lily.
Translation: T.N. Ramachandran

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
aana seyalaal thiruvaanaik
kaaven'ru atha'rkup peyaraaka
gnaana mudaiya orusila:nthi
:nampar sempon thirumudimael
kaanal viravum sarukuuthiraa
va'n'nang kala:ntha vaay:noolaal
mael:nal thirumae'r kaddiyena
viri:nthu se'riyap puri:nthu'lathaal.
சிற்பி