பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கங்கள், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
68 கோச்செங்கட்சோழ நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18
பாடல் எண் : 2

அப்பூங் கானில் வெண்ணாவல்
    அதன்கீழ் முன்னாள் அரிதேடும்
மெய்ப்பூங் கழலார் வெளிப்படலும்
    மிக்க தவத்தோர் வெள்ளானை
கைப்பூம் புனலு முகந்தாட்டிக்
    கமழ்பூங் கொத்தும் அணிந்திறைஞ்சி
மைப்பூங் குவளைக் களத்தாரை
    நாளும் வழிபட் டொழுகுமால்.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை :

அப்பூங்காவில், வெண்ணாவல் மரத்தின் கீழ், முற்காலத்தில், திருமால் தேடிய உண்மை வடிவான மலர் போன்ற திருவடிகளையுடைய இறைவர் சிவலிங்கத் திருமேனி கொண்டு வெளிப்பட்டருள, பெருகிய தவத்தையுடைய ஒரு வெண்மையான யானை, ஒருநாள் தன் துதிக்கையால் அழகிய நீரை முகந்து அத் திருமேனிக்குத் திருமுழுக்காட்டி, நறுமணமுடைய மலர்க் கொத்துகளையும் அணிவித்து வழிபட, அவ்வன்பு மீதூர்ந்த நிலையில், கரிய குவளை போன்ற கழுத்தையுடைய இறைவரை நாள்தோறும் வழிபட்டு வந்தது.

குறிப்புரை :

மைப்பூங்குவளை - கருங்குவளை. திருக்கயிலையில் சிவகணத்தவராக வாழ்ந்தவர்களுள் மாலியவான், புட்பதந்தன் என்பார் இருவர். இவர்கள் தாம் மேற்கொண்டிருக்கும் சிவத் தொண்டில் தாம் தாமும் மேம்பட்டவர் என மாறுபட்டு, இறுதியாக மாலியவான் புட்பதந்தனை யானையாகுக என்றும், புட்பதந்தன் மாலியவானைச் சிலந்தியாகுக என்றும் சபித்துக் கொண்டனர். இருவரும் இறைவனின் ஆணையின் வண்ணம் யானையும் சிலந்தியுமாகத் தோன்றி இத் திருப்பதியில் தம்முள் மாறுபட்ட சிவத்தொண்டினை ஆற்றி வந்தனர். அந்நிலையில் அவர்கள் வழிபட்ட இடமே திருவானைக்கா ஆகும். இதனை வரும் பாடலால் அறியலாம். இங்குக் குறிக்கப்பெற்ற யானை புட்பதந்தன் ஆதலின் `மிக்க தவத்தோர் வெள்ளானை' என்றார் ஆசிரியர்.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
When in that flowery forest under a white naaval tree
The Lord of the flower-soft feet whose form is Truth
And who was, of yore, searched by Vishnu, manifested Himself,
A white tusker of exceeding tapas ritualistically bathed
Him with the beauteous water carried in its trunk,
Adorned Him with bunches of fragrant flowers and adored Him;
Thus it performed daily pooja to the Lord
Whose throat is dark like the blue lily.
Translation: T.N. Ramachandran

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
appoong kaanil ve'n'naaval
athankeezh munnaa'l arithaedum
meyppoong kazhalaar ve'lippadalum
mikka thavaththoar ve'l'laanai
kaippoom punalu muka:nthaaddik
kamazhpoong koththum a'ni:nthi'rainjsi
maippoong kuva'laik ka'laththaarai
:naa'lum vazhipad dozhukumaal.
சிற்பி