பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கங்கள், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
68 கோச்செங்கட்சோழ நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18
பாடல் எண் : 15

அக்கோயில் தொறுஞ்சிவனுக்
    கமுதுபடி முதலான
மிக்கபெருஞ் செல்வங்கள்
    விருப்பினால் மிகஅமைத்துத்
திக்கனைத்துந் தனிச்செங்கோல்
    முறைநிறுத்தித் தேர்வேந்தர்
முக்கண்முதல் நடமாடும்
    முதல்தில்லை முன்னினார்.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை :

அவ்வகையிலான கோயில்கள் தோறும் இறை வற்குத் திருவமுதுக்குரிய படித்தரம் முதலான அனைத்துச் செயல் களுக்கும் வேண்டிய பெருஞ் செல்வங்களைத் தம் விருப்பத்திற் கிணங்கப் பெரிதும் அமைத்து, எல்லாத் திசைகளிலும் ஒப்பில்லாத தம் செங்கோல் ஆணை முறையைச் செலுத்தி நிறுத்தித், தேர்ப்படையை உடைய கோச்செங்கண்ணனார் முக்கண்களையுடைய இறைவர் திருக்கூத்து இயற்றுகின்ற முதன்மையுடைய திருத்தில்லையை நினைந்து அடைந்தார்.

குறிப்புரை :

இறைவற்குரிய திருவமுது முதலாக உள்ள அனைத்துச் செயற்பாடுகளுக்கும் (ஆண்டாண்டு தோறும் தவறாது நிகழ்வதற் கென) நிலங்களாகவோ பணமாகவோ உரிய பொருள்களாகவோ கொடுக்கப்படும் பொருள்கள் `அறக்கட்டளை' எனப்படும். நாள் வழிபாடும் சிறப்பு வழிபாடும் தொடர்ந்து நிகழ இவ்வறக்கட்டளைகள் பயன்பட்டு வரும் என்று நம் முன்னோர் கருதினர்.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
In each temple, for providing nectarean food and other
Services to Lord Siva, he made, in all love,
Exceedingly great and rich endowments; his unique sceptre
Held sway in all the directions; then the king
Of vast chariotry, thinking of Tillai par excellence
Where dances the Lord of triple eyes, came thither.
Translation: T.N. Ramachandran

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
akkoayil tho'runjsivanuk
kamuthupadi muthalaana
mikkaperunj selvangka'l
viruppinaal mikaamaiththuth
thikkanaiththu:n thanichchengkoal
mu'rai:ni'ruththith thaervae:nthar
mukka'nmuthal :nadamaadum
muthalthillai munninaar.
சிற்பி