பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கங்கள், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
68 கோச்செங்கட்சோழ நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18
பாடல் எண் : 11

தேவி புதல்வன் பெற்றிறக்கச்
    செங்கோல் சோழன் சுபதேவன்
ஆவி அனைய அரும்புதல்வன்
    தன்னை வளர்த்தங் கணிமகுடம்
மேவும் உரிமை முடிகவித்துத்
    தானும் விரும்பு பெருந்தவத்தின்
தாவில் நெறியைச் சென்றடைந்து
    தலைவர் சிவலோ கஞ்சார்ந்தான்.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை :

தன் மனைவியான கமலவதி மகனைப் பெற்றெ டுத்து இறந்துவிடச், செங்கோன்மையுடைய சோழனான `சுபதேவன்\', தன் உயிர் போன்ற அம்மகனை வளர்த்து, உரிய வயதில், அழகு பொருந்திய முடியைப் பொருந்திய தனயன் என்னும் உரிமைப்படி, முடிசூட்டி, அரசன் எனும் பட்டம் தந்து, தானும் விரும்புதற்குரிய பெரிய தவம் செய்தல் எனும் குற்றம் இல்லாத நெறியை மேற் கொண்டு, அதன் பயனாக இறைவரின் இருக்கையான சிவலோகத்தை எய்தினன்.

குறிப்புரை :

உரிமை முடி - தந்தை தனயன் என்னும் வழிவழி வரும் உரிமை மரபால் முடிசூட்டி.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
Soon after the delivery, the queen passed away;
Subhadeva, the righteous Chola ruler brought up his son,
Dear to him as his very life; < (in due time) he crowned him
As the king, and invested him with the rights of a monarch;
Then in all love he pursued the flawless path of great tapas
And ultimately reached Siva-loka.
Translation: T.N. Ramachandran

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
thaevi puthalvan pe'r'ri'rakkach
sengkoal soazhan supathaevan
aavi anaiya arumputhalvan
thannai va'larththang ka'nimakudam
maevum urimai mudikaviththuth
thaanum virumpu peru:nthavaththin
thaavil :ne'riyaich sen'radai:nthu
thalaivar sivaloa kanjsaar:nthaan.
சிற்பி