பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கங்கள், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
68 கோச்செங்கட்சோழ நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18
பதிக வரலாறு :

தொகை
`தென்னவனாய் உலகாண்ட செங்கணாற்கு அடியேன்'
(தி.7 ப.39 பா.11)
வகை
மைவைத்த கண்டன் நெறியன்றி மற்றோர் நெறிகருதாத்
தெய்வக் குடிச்சோழன் முன்பு சிலந்தியாய்ப் பந்தர்செய்து
சைவத் துருவெய்தி வந்து தரணிநீ டாலயங்கள்
செய்வித் தவன்திருக் கோச்செங் கணான்எனுஞ் செம்பியனே.
-தி11 திருத்தொண்டர் திருவந்தாதி பா.81
செம்பொன் அணிந்துசிற் றம்பலத் தைச்சிவ லோகமெய்தி
நம்பன் கழற்கீ ழிருந்தோன் குலமுதல் என்பர்நல்ல
வம்பு மலர்த்தில்லை யீசனைச் சூழ மறைவளர்த்தான்
நிம்ப நறுந்தொங்கற் கோச்செங்க ணான்என்னும் நித்தனையே.
-தி.11 திருத்தொண்டர் திருவந்தாதி பா.82
விரி
தொகை, பொ-ரை: சோழராயிருந்து சோழநாட்டை ஆட்சிசெய்த தோடு பாண்டி நாட்டையும் ஆண்ட கோச்செங்கட் சோழ நாயனார்க்கு அடியேன்.
வகை, பொ-ரை: திருநீலகண்டப் பெருமானது சிவநெறியல்லாது பிற நெறிகளைப் பொருள் எனக் கருதாத தெய்வத்தன்மை பொருந் திய குடியில் வந்த சோழர், முன்னைப் பிறவியில் சிலந்தியாயிருந்து சிவலிங்கத் திருமேனியில் சருகு விழாமல் தன் உமிழ்நீராம் நூலினால் பந்தர் அமைத்து, அதனால் சைவநெறி தழையவரும் உருவில் வந்து அரசனாய் தோன்றி, இவ்வுலகில் சிவனுக்கு உயர்ந்த பல மாடக் கோயில்களை அமைத்தவர், கோச்செங்கணான் எனும் பெயருடைய சோழ மன்னர் ஆவர்.
வகை, பொ-ரை: மணம் நிறைந்த வேப்பு மாலையணிந்த கோச் செங்கணான் எனும் சிவபதமாகிய அழியா நிலைபெற்ற சோழரை, சிற்றம்பலக் முகட்டினைப் பொன்னால் வேய்ந்து சிவலோகமடைந்து சிவனது திருவடிக்கீழ் இருந்தவறது வழிவந்தவர் என்றும் மலர்கள் நிறைந்த தில்லைப் பெருமானின் அம்பலத்தைச் சூழ மறையவர்க்கு மாளிகைகள் பல அமைத்தவர் என்றும் கூறுவர்.

சிற்பி