பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கங்கள், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
31 தண்டியடிகள் நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26
பாடல் எண் : 9

வில்லால் எயில்மூன் றெரித்தபிரான்
    விரையார் கமலச் சேவடிகள்
அல்லால் வேறு காணேன்யான்
    அதுநீர் அறிதற் காரென்பார்
நில்லா நிலையீர் உணர்வின்றி
    நுங்கண் குருடாய் என்கண்உல
கெல்லாங் காண யான்கண்டால்
    என்செய் வீர்என் றெடுத்துரைத்தார்.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை :

`மேருமலையை வில்லாகக் கொண்டு புரங்கள் மூன்றினையும் எரித்த பெருமானது நறுமணம் பொருந்திய தாமரை மலர்போலும் திருவடிகளை அல்லாது வேறொன்றும் என் கண்ணால் நான் காணேன்! அப்பேரின்பத்தைப் பெறுதற்கு நீங்கள் ஆர்?' என்று கூறுவாராய், மேலும் அவரிடம், நில்லாதவற்றை நிலையின என்றுண ரும் புல்லறிவாளர்களே! புறத்தே பார்க்கும் பார்வை உணர்வின்றி உங்கள் கண்கள் குருடாகவும், எம் கண்கள் உலகெல்லாம் காணுமாறு ஒளிபெறவும் நேரின், நீர் என் செய்வீர்? என்று கேட்டார்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
“I will not behold aught but the lotus-feet
Of the Lord who with His bow burnt the triple
Hostile cities; who are you to comprehend that?”
This said, he threw down a challenge when he said:
“O you of mutable plight! If losing light,
Your eyes turn blind, and I be endowed with eyes
To behold, in the presence of men on earth,
What will you then do?”
Translation: T.N. Ramachandran

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
villaal eyilmoon 'reriththapiraan
viraiyaar kamalach saevadika'l
allaal vae'ru kaa'naenyaan
athu:neer a'ritha'r kaarenpaar
:nillaa :nilaiyeer u'narvin'ri
:nungka'n kurudaay enka'nula
kellaang kaa'na yaanka'ndaal
ensey veeren 'reduththuraiththaar.
சிற்பி