பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கங்கள், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
31 தண்டியடிகள் நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26
பாடல் எண் : 13

நெஞ்சின் மருவும் கவலையினை
    ஒழிநீ நின்கண் விழித்துஅந்த
வஞ்ச அமணர் தங்கள்கண்
    மறையு மாறு காண்கின்றாய்
அஞ்ச வேண்டா வென்றருளி
    அவர்பால் நீங்கி அவ்விரவே
துஞ்சும் இருளின் அரசன்பாற்
    தோன்றிக் கனவி லருள் புரிவார்.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை :

தண்டியே! `நின் நெஞ்சில் கொண்ட கவலையை ஒழிவாய்! உன் கண்ணை நீ விழித்துப் பார்வை பெறவும், அவ்வஞ்சக ராய சமணர்களின் கண்கள் மறையவும் நீ காணப்போகின்றாய்! அஞ்ச வேண்டா' என அருளி, அவரிடம் நீங்கி, அவ்விரவிலேயே அனைவ ரும் துயிலும் இருளில், அரசனிடத்துத் தோன்றி, அவன் கனவில் அருள் செய்வாராகிய பெருமான்,

குறிப்புரை :

************

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
“Be rid of the misery that pervades your heart;
You will see that whereas your eyes will be able
To see, the sight of the truculent Samanas will vanish;
Fear not.” Thus the Lord graced him; that very night
In dense darkness He appeared in the dream
Of the King and graced him thus:
Translation: T.N. Ramachandran

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
:nenjsin maruvum kavalaiyinai
ozhi:nee :ninka'n vizhiththua:ntha
vanjsa ama'nar thangka'lka'n
ma'raiyu maa'ru kaa'nkin'raay
anjsa vae'ndaa ven'raru'li
avarpaal :neengki avviravae
thunjsum iru'lin arasanpaa'r
thoan'rik kanavi laru'l purivaar.
சிற்பி