பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கங்கள், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
31 தண்டியடிகள் நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26
பதிக வரலாறு :

தொகை
`...நாட்டமிகு தண்டிக்கும் ..... அடியேன்'
(தி.7 ப.39 பா.5)
வகை
கண்ணார் மணியொன்றும் இன்றிக் கயிறு பிடித்தரற்குத்
தண்ணார் புனல்தடந் தொட்டலுந் தன்னை நகும்அமணர்
கண்ணாங் கிழப்ப அமணர் கலக்கங்கண் டம்மலர்க்கண்
விண்ணா யகனிடைப் பெற்றவன் ஆரூர் விறல்தண்டியே.
தி.11 திருத்தொண்டர் திருவந்தாதி பா.37
விரி
தொகை, பொ-ரை: தண்டியடிகளுக்கும் அடியேன். வகை, பொ-ரை: கண்பார்வை சிறிதும் இல்லாது கயிற்றைப் பற் றித் தடவிச் சிவபிரானுக்குக் குளிர்ந்த நீர் உடைய குளத்தினை அகழ்ந்து தோண்டுதலும், தம்மை இகழ்ந்துரைத்த சமணர் அப் பொழுதே கண்ணொளி இழந்து கலங்குமாறு செய்து, மலர்போன்ற தம் கண்ணொளியினைச் சிவபெருமான் அருளால் வரப்பெற்றவர், திருவாரூரில் தோன்றிய அருள் வலிமைமிக்க தண்டியடிகள் ஆவர்.

சிற்பி