பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கங்கள், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
21 திருநாவுக்கரசு நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
முந்தய பாடல் மொத்தம் 429 பாடல்கள்
பாடல் எண் :
அடுத்த பாடல்
பாடல் எண் : 134

ஈன்றாளு மாய்எனக் கெந்தையு
   மாகி யெனவெடுத்துத்
தோன்றாத் துணையாய் இருந்தனன்
   தன்அடி யோங்கட்கென்று
வான்தாழ் புனல்கங்கை வாழ்சடை
    யானைமற் றெவ்வுயிர்க்குஞ்
சான்றாம் ஒருவனைத் தண்டமிழ்
   மாலைகள் சாத்தினரே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை :

`ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய்` எனத் தொடங்கித் `தோன்றாத் துணையாய் இருந்தனன் தன்னடியோங் கட்கே` என்று நிறைவுறும் அக்கருத்துக் கொண்ட பாடல் முதலாக, வானினின்று உலகில் தாழும் நீரையுடைய கங்கை வாழ்கின்ற சடையை உடைய இறைவரை, எவ்வுயிர்களுக்கும் சான்றாய் இருக் கும் ஒருவரை, குளிர்ந்த தமிழால் ஆன மாலைகளைக் கொண்டு சாத்தினார்.

குறிப்புரை :

நாவரசர் இதுபொழுது அருளியது `ஈன்றாளுமாய்` எனத் தொடங்கும் பதிகமாகும் (தி.4 ப.94). இப்பதிகத்துவரும் முதல்பாடலின் முதலடியையும் நான்காம் அடியையும் இயைத்துக் கூறினார், அப்பாடல் பொருண்மை அவ்வாறாக அமைதலின். உரை சேரும் எண்பத்து நான்கு நூறாயிரமாம் யோனி பேதங்களையும் படைத்து அவற்றின் உயிர்க்குயிராய் இறைவன் நிற்றலின் `எவ்வுயிர்க் கும் சான்றாம் ஒருவன்` என்றார். `எங்கும் உளன் ஒருவன் காணுங் கொல் என்று அஞ்சி அங்கம் குலைவது அறிவு` (குமர-நீதிநெறி.94) என்பர் குமரகுருபர அடிகளும். ஈண்டும் தண் தமிழ் மாலைகள் என்றது, பாடற் பன்மை நோக்கியாம். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
His hymn began thus: “He is Mother and Father too.”
The hymn ended thus: “He is the invisible aid to His devotees.”
With this and other hymns he lauded the Lord
That bears on His crown the Ganga that flows from the heavens,
The One that is the Witness true to all the lives,
In garlands of cool and merciful Tamil.
Translation: T.N. Ramachandran

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
een'raa'lu maayenak ke:nthaiyu
maaki yenaveduththuth
thoan'raath thu'naiyaay iru:nthanan
thanadi yoangkadken'ru
vaanthaazh punalkangkai vaazhsadai
yaanaima'r 'revvuyirkkunj
saan'raam oruvanaith tha'ndamizh
maalaika'l saaththinarae.
சிற்பி