எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
46 திருப்படையெழுச்சி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2


பதிக வரலாறு :

பிரபஞ்சப் போர்
திருப்படை - தொண்டர் படை. அதனது எழுச்சியைக் கூறும் பகுதி இது. இது, முன்வந்த யாத்திரைப் பத்தினை அடுத்து அருளிச் செய்ததாகும். யாத்திரைப் பத்தினால் அடியார் அனைவரையும் அழைத்துத் திரட்டிக்கொண்ட அடிகள், அவர்கள் பின்னரும் மயங்காமைப் பொருட்டு இதனை அருளிச் செய்து அருளாண்மையை எழுப்பிக் கொண்டு, அவர்களோடு இறைவன் திருவருளிற் கலந்தார் என்க. இதற்கு, `பிரபஞ்சப் போர்` என முன்னோர் குறிப்புரைத்ததும், இது பற்றி. வெண்பா யாப்பினால் இயன்றவற்றை இறுதிக்கண் ஒருங்கு வைத்துக் கோத்தனராதலின், அளவிற் சிறிதாயினும் முன்னை யாப்புக்களோடு இயைய இதனை அவற்றிற்கு முன்வைத்துக் கோத்தனர். `பத்து` என்றானும், `பதிகம்` என்றானும் கூறாமையின், உள்ளவாறு, இஃது இரண்டு திருப்பாட்டுக்களான் இயன்றது என்றே கொள்ளற்பாற்று. இது, தில்லையில் அருளிச்செய்யப்பட்டது என்பதே பதிப்புக்களிற் காணப்படுவது.

 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.