எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
15 திருத்தோணோக்கம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14


பதிக வரலாறு :

பிரபஞ்ச சுத்தி
தோள் + நோக்கம் = தோணோக்கம். `தோளை நோக்குதல் (பார்த்தல்)` என்பது பொருள். வாளா, `நோக்கம்` என்னாது, `தோள் நோக்கம்` என்றமையின் இது, விநோதக் கூத்து ஏழனுள் ஒன்று எனப் படும் நோக்கு ஆமாறு இல்லை. மேற்காட்டிய (தி.8 திருச்சாழல் - விளக்கம்) அடியார்க்கு நல்லார் மேற்கோள் சூத்திரத் தொடராகிய ``நல்லார்தந் தோள்வீச்சு`` என்பதனுள் குறிக்கப்பட்ட `தோள்வீச்சு` என்பதேயாதல் வேண்டும். `வீச்சு` என்னாது ``நோக்கம்`` என்றது, காலவேறு பாட்டான் அமைந்த வேறுபாடு எனலாம்.
பெண்கள் சிலர் முதலில் ஒருங்குகூடி நின்று ஒருவர் தோளை மற்றொருவர் சில பாட்டுக்களைச் சொல்லித் தொட்டு விளையாடி, முடிவில் இருவர் இருவர் சேர்ந்து ஒருவர் கைகளை மற்றொருவர் மாற்றிப் பிடித்துப் பாடிக்கொண்டே வேகமாகச் சுற்றி முடிக்கும் ஒருவகை விளையாட்டு இக்காலத்திலும் நிகழ்ந்து வந்தது. எனினும், இஃது இன்னவகை விளையாட்டு எனத் துணியக்கூட வில்லை.
முன்னர்ப் போந்த திருவுந்தியாரில் வந்தனவும், இதனுள் வருவனவும் ஆகிய பாட்டுக்கள், இவற்றிற்கு முன்னுள்ள விளை யாட்டுக்களின் பாட்டுக்கள்போலக் காமப்பொருள் பற்றியவாகாது மகளிர் கடவுளை வாழ்த்திப் பாடும் கடவுள் வாழ்த்துப் பாடல்களே யாம் என்க. இதன் முதல் திருப்பாட்டில் இறைவன் அடிகட்கு உலக மயக்கினை நீக்கியருளினமையை இனிதெடுத்தோதினமை பற்றியும், இறுதி நான்கு திருப்பாட்டுக்களுள் சிவபெருமான் தக்கன் முதலி யோரைத் தூய்மை செய்தமை, பிரம விட்டுணுக்களது மயக்கத்தைப் போக்கினமை, அடிகளது பிறவியையும், தற்போதத்தையும் அறுத் தமை என்பவற்றை அருளிச்செய்தமைபற்றியும் இதற்கு, `பிரபஞ்ச சுத்தி` எனக் குறிப்புரைத்தனர் முன்னோர். விளையாட்டின் இயல்பு பற்றி இது தெள்ளேணத்தின் பின்னராதல், சாழலின் பின்னராதல் கோக்கற்பாலதாயினும், பதினான்கு திருப்பாட்டுக்களான் இயன்றமை பற்றி ஈண்டு வைத்துக்கோக்கப்பட்டது.
இது, `தில்லையில் அருளிச் செய்யப்பட்டது` என்பதே பதிப்புக்களில் காணப்படுவது. இது முழுவதும் நாலடித் தரவுக் கொச்சகக் கலிப்பாவினால் ஆயது. இதனுள்ளும் வேண்டும் இடங் களில், `பாடி` என்பது வருவிக்க.

 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.