எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
09 திருப்பொற்சுண்ணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20


பதிக வரலாறு :

ஆனந்தமனோலயம்
பொற்சுண்ணம் - பொன்போலும் பொடி; இது வண்ண உவமை. `பொன், அழகு` என்பாரும் உளர். `சுண்ணம்` என்பது, `சூர்ணம்` என்னும் ஆரியச் சொல்லின் திரிபு. அரிதாரம் முதலிய மணப் பொருள்கள் பலவற்றை உரலிலிட்டு இடித்த நறுமணப் பொடியே இங்குப் பொற்சுண்ணம் எனப்பட்டது. இதனை மகளிர் பலர் குழுமி இடிப்பர் என்பது, ``பலர்தொகுபு இடித்த தாதுகு சுண்ணத்தர்`` (மதுரைக்காஞ்சி.அடி.399) என்னும் அடிக்கு ``இடிக்க வல்லார் பலரும் திரண்டு இடித்த பூந்தாதுக்கள் போலப் பரக்கும் சுண்ணத்தை யுடையாரும்`` என நச்சினார்க்கினியர் உரைத்த உரையாலும் அறியப் படும். சுண்ணம் இடித்தல், தினைகுற்றுதல் முதலியவற்றைச் செய்யும் பொழுது பாடப்படும் பாட்டே, `வள்ளை` என்னும் உரற்பாட்டு. இது, மகளிரிடையே பல பொருள் பற்றி வருமாயினும் புலவர்கள் இதனை அகப்பாட்டுள் தலைவனைப் பற்றித் தலைவியும், தோழியும் பாடுவ தாகவும், புறப்பாட்டுள் பகைவரை வென்ற அரசனது புகழைப் பலரும் பாடுவதாகவும், பாடாண்பாட்டுள் பாட்டுடைத் தலைவனது இயல்பை அவன் மேற் காதல் கொண்டவள் பாடுவதாகவும் செய்வர். அவ்வகை களுள் இது, பாடாண்திணைக் கடவுள் வாழ்த்துப் பகுதி. அதனுள்ளும் கைக்கிளையாகாது ஐந்திணையேயாம். பாடாண் பாட்டு ஐந்திணை பற்றியும் வரும் என்பதனை, ``புரைதீர் காமம் புல்லிய வகையினும்` (தொல்-பொருள்-79.) என்றதனான் அறிக. தம் இயல்பின்படியே நச்சினார்க்கினியர் இதற்கு வேறுரை உரைத்தாராயினும், உண்மை யுரையை உரையாசிரியர் உரைத்திருத்தல் காண்க. மற்றும், ``மக்கள் நுதலிய``(தொல். பொருள். 57.) ``புறத்திணை மருங்கின்`` (தொல். பொருள்.58.) என்னும் நூற்பாக்களையும் இங்கு உடன் நோக்கி உணர்க. `சுண்ணம்` என்பது இங்கு அதனை இடிக்குங் காலத்துப் பாடும் பாட்டிற்கு ஆயிற்று.
ஐந்திணை வகைகளுள் இப்பகுதி, கற்பிடத்துப் பிரிவின் கண் பருவங்கண்டு ஆற்றாளாய தலைமகளைத் தலைவர் வருவார் எனக் கூறி வற்புறுக்குந் தோழி கூற்று. இதன்கண் அடிகள் இன்ப மேலீட்டினையே புலப்படுத்தருளுதலின் இப்பகுதிக்கு, `ஆனந்த மனோலயம்`` எனக் குறிப்புரைத்தனர் முன்னோர். ஆனந்த மனோலயம் - இன்பத்தால் உண்டாகிய உள்ள ஒடுக்கம்.
இதன் கண் உள்ள திருப்பாட்டுக்கள் எண் சீரடிகளாலாயவை. அச்சீர்களுள் மூன்றாவதும் ஏழாவதும் முன்னைச் சீர்களோடு வெண்டளை வகையிற் கண்ணுற்று இருவகை மாச்சீராகியும், நான்கா வதும் எட்டாவதும் தேமாவாகியும் நிற்கும். எனினும், இவ்விரு மாச்சீர்களின் ஓசையை ஒரு விளங்காய்ச் சீர் ஓராற்றால் தந்து நிற்றலின், ஒரோவடியிடத்து எழுசீரும், அறுசீரும் நிற்றல் உளவாம். இதுபோலும் விருத்த யாப்பினுள் இங்ஙனம் சீர்கள் மயங்கி வருதல் இயல்பாதலின் இம்மயக்கம் பற்றி இப்பாட்டுக்களில் எல்லாரும் எல்லா அடிகளையும் அறுசீரான் இயன்றவையாகக் கூறுதல் பொருந் தாமையை, அவர் காட்டும் சீர்களுள் நாலசைச் சீர் பயின்று வருதலான் அறிந்து கொள்க. நாலசையின் ஆகும் சீர்களும் உள என நூல் செய்தோரும், அவை அருகி வருமெனக் கொண்டதல்லது பயின்று வரும் எனக் கொள்ளாமை வெளிப்படை. இது தில்லையில் அருளிச்செய்யப்பட்டதாகவே, பதிப்புக்களிற் காணப்படுகின்றது. விருத்தப்பாக்களுள் இப்பகுதி சந்தமுடைத்தாதலின், இதனை முன்வைத்துக் கோத்தனர்.

 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.