ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
053 திருக்கடவூர் மயானம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 4 பண் : பழம் பஞ்சுரம்

நறைசேர் மலர்ஐங் கணையானை
    நயனத் தீயாற் பொடிசெய்த
இறையா ராவர் எல்லார்க்கும்
    இல்லை யென்னா தருள்செய்வார்
பறையார் முழவம் பாட்டோடு
    பயிலுந் தொண்டர் பயில்கடவூர்ப்
பிறையார் சடையார் மயானத்துப்
    பெரிய பெருமா னடிகளே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

ஒலிக்கின்ற மத்தளம், பிற பறை இவைகளைப் பாட்டுக்களோடு பயில்கின்ற அடியார்கள் நிறைந்த திருக்கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கும் பெரிய பெருமானடிகளாகிய சிவபெருமானார், தேன் பொருந்திய ஐந்துவகை மலர்களாகிய அம்பு களையுடைய மன்மதனை, கண்ணில் உண்டாகிய நெருப்பாற் சாம் பலாக்கிய இறைவராவர்; `இல்லை` என்று சொல்லாமல் யாவர்க்கும் அவரவர் விரும்பியவற்றை ஈபவர்; பிறை பொருந்திய சடையை யுடையவர்.

குறிப்புரை:

உலகின்பத்தை வேண்டி வணங்குவார்க்கு உலகின் பத்தையும், வீட்டின்பத்தை வேண்டி வணங்குவார்க்கு வீட்டின் பத்தையும் தருதலின், `எல்லார்க்கும் இல்லை என்னாது அருள் செய்வார்` என்று அருளினார். ``வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்`` (தி.6 ப.23 பா.1) என்று அருளியது காண்க.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
తేనెలు గల ఐదు పుష్ప బాణాలు గలిగిన మన్మథుని, నీ త్రినేత్రాన్ని తెరిచి మంటలతో బూడిద గావించిన వాడా!
నేనేమి ఇవ్వలేనని చెప్ప కుండా అడిగిన వారికి అడిగన వన్నీ ఇచ్చేవాడా!
స్వర వాద్యాలను ఇతర తోలు వాద్యాలను గుంపులుగా కూడి అభ్యాసం చేస్తున్న భక్తులు గల కటావూరులో ఉంటూ నెలవంకను జటలో అలంకరించిన దేవా!

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
රොන් පිරි පස් පියුම් දුනුදැරි අනඟ
නයන ගින්නෙන් අළු කර දැමූ සමිඳාණන්
තමන් රිසි සේ යැද සිටිනා සැමටම
නැත නොකියා සියල්ල ඉටු කර දුන්
පසඟතුරු නද සමගින්
තුති ගයන බැතියන් වසනා කඩවූර්
මයානම‚ නව සඳ සිකර පැළඳ
වැඩ සිටින්නේ සිව රජිඳුන් නොවේදෝ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
वे प्रभु पंचपुष्प बाणवाले कामदेव को
त्रिानेत्रा से भस्म करनेवाले हैं।
किसी को \\\\\\\\\\\\\\\'नाहिं\\\\\\\\\\\\\\\' न कहकर
सबको उनके प्रिय वस्तुओं को देनेवाले हैं।
जटा में बालचन्द्र धाारण करनेवाले हैं।
वे प्रभु मृदंग, ढोल बजानेवाले
भक्तों से घिरे तिरुक्कडवूर के
मयानम् मन्दिर में प्रतिष्ठित बृहद्देव हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
see 1st verse.
is the supreme god who reduced to ashes by the fire issuing from his frontal eye, the cupid who has arrows of five flowers which have honey in them.
grants to all what they wish without saying I have nothing to give has a caṭai on which he wears a crescent and dwells in Kaṭavūr where devotees who practise on mudavūr and other leather instruments with vocal music, are crowding.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


Resounding Drum, other tabors tapping,
and servitors singing , Magnificent Siva
Lord abides in Katavoor Mayaanam;
He ashed the mind-churning Manmath
with His Eye-Spouted fire; never saying
no to any, He is the Giver to all they ask for
joy and bliss Earthly and Ethereal ;
His are locks locking crescent down!

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2020

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀦𑀶𑁃𑀘𑁂𑀭𑁆 𑀫𑀮𑀭𑁆𑀐𑀗𑁆 𑀓𑀡𑁃𑀬𑀸𑀷𑁃
𑀦𑀬𑀷𑀢𑁆 𑀢𑀻𑀬𑀸𑀶𑁆 𑀧𑁄𑁆𑀝𑀺𑀘𑁂𑁆𑀬𑁆𑀢
𑀇𑀶𑁃𑀬𑀸 𑀭𑀸𑀯𑀭𑁆 𑀏𑁆𑀮𑁆𑀮𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀫𑁆
𑀇𑀮𑁆𑀮𑁃 𑀬𑁂𑁆𑀷𑁆𑀷𑀸 𑀢𑀭𑀼𑀴𑁆𑀘𑁂𑁆𑀬𑁆𑀯𑀸𑀭𑁆
𑀧𑀶𑁃𑀬𑀸𑀭𑁆 𑀫𑀼𑀵𑀯𑀫𑁆 𑀧𑀸𑀝𑁆𑀝𑁄𑀝𑀼
𑀧𑀬𑀺𑀮𑀼𑀦𑁆 𑀢𑁄𑁆𑀡𑁆𑀝𑀭𑁆 𑀧𑀬𑀺𑀮𑁆𑀓𑀝𑀯𑀽𑀭𑁆𑀧𑁆
𑀧𑀺𑀶𑁃𑀬𑀸𑀭𑁆 𑀘𑀝𑁃𑀬𑀸𑀭𑁆 𑀫𑀬𑀸𑀷𑀢𑁆𑀢𑀼𑀧𑁆
𑀧𑁂𑁆𑀭𑀺𑀬 𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑀸 𑀷𑀝𑀺𑀓𑀴𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

নর়ৈসের্ মলর্ঐঙ্ কণৈযান়ৈ
নযন়ত্ তীযার়্‌ পোডিসেয্দ
ইর়ৈযা রাৱর্ এল্লার্ক্কুম্
ইল্লৈ যেন়্‌ন়া তরুৰ‍্সেয্ৱার্
পর়ৈযার্ মুৰ়ৱম্ পাট্টোডু
পযিলুন্ দোণ্ডর্ পযিল্গডৱূর্প্
পির়ৈযার্ সডৈযার্ মযান়ত্তুপ্
পেরিয পেরুমা ন়ডিহৰে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

நறைசேர் மலர்ஐங் கணையானை
நயனத் தீயாற் பொடிசெய்த
இறையா ராவர் எல்லார்க்கும்
இல்லை யென்னா தருள்செய்வார்
பறையார் முழவம் பாட்டோடு
பயிலுந் தொண்டர் பயில்கடவூர்ப்
பிறையார் சடையார் மயானத்துப்
பெரிய பெருமா னடிகளே


Open the Thamizhi Section in a New Tab
நறைசேர் மலர்ஐங் கணையானை
நயனத் தீயாற் பொடிசெய்த
இறையா ராவர் எல்லார்க்கும்
இல்லை யென்னா தருள்செய்வார்
பறையார் முழவம் பாட்டோடு
பயிலுந் தொண்டர் பயில்கடவூர்ப்
பிறையார் சடையார் மயானத்துப்
பெரிய பெருமா னடிகளே

Open the Reformed Script Section in a New Tab
नऱैसेर् मलर्ऐङ् कणैयाऩै
नयऩत् तीयाऱ् पॊडिसॆय्द
इऱैया रावर् ऎल्लार्क्कुम्
इल्लै यॆऩ्ऩा तरुळ्सॆय्वार्
पऱैयार् मुऴवम् पाट्टोडु
पयिलुन् दॊण्डर् पयिल्गडवूर्प्
पिऱैयार् सडैयार् मयाऩत्तुप्
पॆरिय पॆरुमा ऩडिहळे
Open the Devanagari Section in a New Tab
ನಱೈಸೇರ್ ಮಲರ್ಐಙ್ ಕಣೈಯಾನೈ
ನಯನತ್ ತೀಯಾಱ್ ಪೊಡಿಸೆಯ್ದ
ಇಱೈಯಾ ರಾವರ್ ಎಲ್ಲಾರ್ಕ್ಕುಂ
ಇಲ್ಲೈ ಯೆನ್ನಾ ತರುಳ್ಸೆಯ್ವಾರ್
ಪಱೈಯಾರ್ ಮುೞವಂ ಪಾಟ್ಟೋಡು
ಪಯಿಲುನ್ ದೊಂಡರ್ ಪಯಿಲ್ಗಡವೂರ್ಪ್
ಪಿಱೈಯಾರ್ ಸಡೈಯಾರ್ ಮಯಾನತ್ತುಪ್
ಪೆರಿಯ ಪೆರುಮಾ ನಡಿಹಳೇ
Open the Kannada Section in a New Tab
నఱైసేర్ మలర్ఐఙ్ కణైయానై
నయనత్ తీయాఱ్ పొడిసెయ్ద
ఇఱైయా రావర్ ఎల్లార్క్కుం
ఇల్లై యెన్నా తరుళ్సెయ్వార్
పఱైయార్ ముళవం పాట్టోడు
పయిలున్ దొండర్ పయిల్గడవూర్ప్
పిఱైయార్ సడైయార్ మయానత్తుప్
పెరియ పెరుమా నడిహళే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

නරෛසේර් මලර්ඓඞ් කණෛයානෛ
නයනත් තීයාර් පොඩිසෙය්ද
ඉරෛයා රාවර් එල්ලාර්ක්කුම්
ඉල්ලෛ යෙන්නා තරුළ්සෙය්වාර්
පරෛයාර් මුළවම් පාට්ටෝඩු
පයිලුන් දොණ්ඩර් පයිල්හඩවූර්ප්
පිරෛයාර් සඩෛයාර් මයානත්තුප්
පෙරිය පෙරුමා නඩිහළේ


Open the Sinhala Section in a New Tab
നറൈചേര്‍ മലര്‍ഐങ് കണൈയാനൈ
നയനത് തീയാറ് പൊടിചെയ്ത
ഇറൈയാ രാവര്‍ എല്ലാര്‍ക്കും
ഇല്ലൈ യെന്‍നാ തരുള്‍ചെയ്വാര്‍
പറൈയാര്‍ മുഴവം പാട്ടോടു
പയിലുന്‍ തൊണ്ടര്‍ പയില്‍കടവൂര്‍പ്
പിറൈയാര്‍ ചടൈയാര്‍ മയാനത്തുപ്
പെരിയ പെരുമാ നടികളേ
Open the Malayalam Section in a New Tab
นะรายเจร มะละรอายง กะณายยาณาย
นะยะณะถ ถียาร โปะดิเจะยถะ
อิรายยา ราวะร เอะลลารกกุม
อิลลาย เยะณณา ถะรุลเจะยวาร
ปะรายยาร มุฬะวะม ปาดโดดุ
ปะยิลุน โถะณดะร ปะยิลกะดะวูรป
ปิรายยาร จะดายยาร มะยาณะถถุป
เปะริยะ เปะรุมา ณะดิกะเล
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

နရဲေစရ္ မလရ္အဲင္ ကနဲယာနဲ
နယနထ္ ထီယာရ္ ေပာ့တိေစ့ယ္ထ
အိရဲယာ ရာဝရ္ ေအ့လ္လာရ္က္ကုမ္
အိလ္လဲ ေယ့န္နာ ထရုလ္ေစ့ယ္ဝာရ္
ပရဲယာရ္ မုလဝမ္ ပာတ္ေတာတု
ပယိလုန္ ေထာ့န္တရ္ ပယိလ္ကတဝူရ္ပ္
ပိရဲယာရ္ စတဲယာရ္ မယာနထ္ထုပ္
ေပ့ရိယ ေပ့ရုမာ နတိကေလ


Open the Burmese Section in a New Tab
ナリイセーリ・ マラリ・アヤ・ニ・ カナイヤーニイ
ナヤナタ・ ティーヤーリ・ ポティセヤ・タ
イリイヤー ラーヴァリ・ エリ・ラーリ・ク・クミ・
イリ・リイ イェニ・ナー タルリ・セヤ・ヴァーリ・
パリイヤーリ・ ムラヴァミ・ パータ・トートゥ
パヤルニ・ トニ・タリ・ パヤリ・カタヴーリ・ピ・
ピリイヤーリ・ サタイヤーリ・ マヤーナタ・トゥピ・
ペリヤ ペルマー ナティカレー
Open the Japanese Section in a New Tab
naraiser malaraing ganaiyanai
nayanad diyar bodiseyda
iraiya rafar ellargguM
illai yenna darulseyfar
baraiyar mulafaM baddodu
bayilun dondar bayilgadafurb
biraiyar sadaiyar mayanaddub
beriya beruma nadihale
Open the Pinyin Section in a New Tab
نَرَيْسيَۤرْ مَلَرْاَيْنغْ كَنَيْیانَيْ
نَیَنَتْ تِيیارْ بُودِسيَیْدَ
اِرَيْیا راوَرْ يَلّارْكُّن
اِلَّيْ یيَنّْا تَرُضْسيَیْوَارْ
بَرَيْیارْ مُظَوَن باتُّوۤدُ
بَیِلُنْ دُونْدَرْ بَیِلْغَدَوُورْبْ
بِرَيْیارْ سَدَيْیارْ مَیانَتُّبْ
بيَرِیَ بيَرُما نَدِحَضيَۤ


Open the Arabic Section in a New Tab
n̺ʌɾʌɪ̯ʧe:r mʌlʌɾʌɪ̯ŋ kʌ˞ɳʼʌjɪ̯ɑ:n̺ʌɪ̯
n̺ʌɪ̯ʌn̺ʌt̪ t̪i:ɪ̯ɑ:r po̞˞ɽɪsɛ̝ɪ̯ðʌ
ʲɪɾʌjɪ̯ɑ: rɑ:ʋʌr ʲɛ̝llɑ:rkkɨm
ʲɪllʌɪ̯ ɪ̯ɛ̝n̺n̺ɑ: t̪ʌɾɨ˞ɭʧɛ̝ɪ̯ʋɑ:r
pʌɾʌjɪ̯ɑ:r mʊ˞ɻʌʋʌm pɑ˞:ʈʈo˞:ɽɨ
pʌɪ̯ɪlɨn̺ t̪o̞˞ɳɖʌr pʌɪ̯ɪlxʌ˞ɽʌʋu:rβ
pɪɾʌjɪ̯ɑ:r sʌ˞ɽʌjɪ̯ɑ:r mʌɪ̯ɑ:n̺ʌt̪t̪ɨp
pɛ̝ɾɪɪ̯ə pɛ̝ɾɨmɑ: n̺ʌ˞ɽɪxʌ˞ɭʼe·
Open the IPA Section in a New Tab
naṟaicēr malaraiṅ kaṇaiyāṉai
nayaṉat tīyāṟ poṭiceyta
iṟaiyā rāvar ellārkkum
illai yeṉṉā taruḷceyvār
paṟaiyār muḻavam pāṭṭōṭu
payilun toṇṭar payilkaṭavūrp
piṟaiyār caṭaiyār mayāṉattup
periya perumā ṉaṭikaḷē
Open the Diacritic Section in a New Tab
нaрaысэaр мaлaрaынг канaыяaнaы
нaянaт тияaт потысэйтa
ырaыяa раавaр эллаарккюм
ыллaы еннаа тaрюлсэйваар
пaрaыяaр мюлзaвaм пааттоотю
пaйылюн тонтaр пaйылкатaвурп
пырaыяaр сaтaыяaр мaяaнaттюп
пэрыя пэрюмаа нaтыкалэa
Open the Russian Section in a New Tab
:naräzeh'r mala'räng ka'näjahnä
:najanath thihjahr podizejtha
iräjah 'rahwa'r ellah'rkkum
illä jennah tha'ru'lzejwah'r
paräjah'r mushawam pahddohdu
pajilu:n tho'nda'r pajilkadawuh'rp
piräjah'r zadäjah'r majahnaththup
pe'rija pe'rumah nadika'leh
Open the German Section in a New Tab
narhâiçèèr malarâing kanhâiyaanâi
nayanath thiiyaarh podiçèiytha
irhâiyaa raavar èllaarkkòm
illâi yènnaa tharòlhçèiyvaar
parhâiyaar mòlzavam paattoodò
payeilòn thonhdar payeilkadavörp
pirhâiyaar çatâiyaar mayaanaththòp
pèriya pèròmaa nadikalhèè
narhaiceer malaraing canhaiiyaanai
nayanaith thiiiyaarh poticeyitha
irhaiiyaa raavar ellaariccum
illai yiennaa tharulhceyivar
parhaiiyaar mulzavam paaittootu
payiiluin thoinhtar payiilcatavuurp
pirhaiiyaar ceataiiyaar maiyaanaiththup
periya perumaa naticalhee
:na'raisaer malaraing ka'naiyaanai
:nayanath theeyaa'r podiseytha
i'raiyaa raavar ellaarkkum
illai yennaa tharu'lseyvaar
pa'raiyaar muzhavam paaddoadu
payilu:n tho'ndar payilkadavoorp
pi'raiyaar sadaiyaar mayaanaththup
periya perumaa nadika'lae
Open the English Section in a New Tab
ণৰৈচেৰ্ মলৰ্ঈঙ কণৈয়ানৈ
ণয়নত্ তীয়াৰ্ পোটিচেয়্ত
ইৰৈয়া ৰাৱৰ্ এল্লাৰ্ক্কুম্
ইল্লৈ য়েন্না তৰুল্চেয়্ৱাৰ্
পৰৈয়াৰ্ মুলৱম্ পাইটটোটু
পয়িলুণ্ তোণ্তৰ্ পয়িল্কতৱূৰ্প্
পিৰৈয়াৰ্ চটৈয়াৰ্ ময়ানত্তুপ্
পেৰিয় পেৰুমা নটিকলে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.