ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
048 திருப்பாண்டிக்கொடுமுடி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பதிக வரலாறு : பண் : பழம் பஞ்சுரம்

சுந்தரர் , திருஈங்கோய்மலை முதலாகப் பல தலங்களைத் தொழுது , கொங்குநாட்டில் காவிரியின் தென்கரையில் உள்ள திருப்பாண்டிக் கொடுமுடி அணைந்து , கோயில்முன் குறுகி , வணங்கி , ` இங்கிவர் தம்மை மறக்கவொண்ணாது ` என்று உள்ளத் தில் எழுந்த குறிப்பினால் திருவைந்தெழுத்தை அமைத்துப் பாடி யருளியது இத் திருப்பதிகம் . ஒவ்வொருபாடலின் இறுதியிலும் ` சொல்லுநா நமச்சிவாயவே ` என்று அருளியிருப்பதால் , இதற்கு , ` நமச்சிவாயத் திருப்பதிகம் ` என்ற பெயர் வழங்கப் படுகிறது . ( தி .12 பெரிய . புரா . ஏயர்கோன் . புரா . 87) குறிப்பு : இத் திருப்பதிகம் , கொடுமுடிக் கோயிலில் உள்ள பெருமானது அழகிய திருமேனியைக் கண்டு வணங்கியபொழுது எழுந்த பேரன்பால் , ` இவரை , யான்மறவேன் ` என்னும்கருத்தால் அருளிச் செய்தது . இதன்கண் திருவைந்தெழுத்தை எடுத்தோதியருளினமையின் , இது , ` நமச்சிவாயத் திருப்பதிகம் ` என்னுந் திருப்பெயரைப் பெற்றது .

 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.