ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
037 திருவையாறு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பதிக வரலாறு :

சுவாமிகள் திருவையாற்றில் கயிலைக் காட்சியைக் கண்டு மகிழ்ந்து , அக்காட்சி மறைந்தபின்பு வருந்தித் தெளிந்து , தாம் கண்ட காட்சியை ` மாதர்ப்பிறைக் கண்ணியானை ` என்னுந் திருப்பதிகத்தினால் அருளிச்செய்து . பின் பலநாள் அங்கு அமர்ந் திருந்தபொழுது பாடியருளிய திருப்பதிகங்களுள் ஒன்று இத் திருப்பதிகம் . ( தி .12 திருநாவு . புரா - 385.) குறிப்பு : இத் திருப்பதிகம் , இறைவனை இடைவிடாது துதிக்கும் பேறு பெற்றமையை நினைந்த மகிழ்ச்சி மீதூர்வின்கண் அருளிச் செய்தது . தொடர்தோறும் ` நானே ` எனப் பலவிடத்தும் பிரிநிலை ஏகாரம் தந்து விதந்தோதியதும் அதனாலேயாம் . ` யானே தவமுடையேன் என்நெஞ்சே நன்னெஞ்சம் யானே பிறப்பறுப்பான் எண்ணினேன் - யானே அக் கைம்மா உரிபோர்த்த கண்ணுதலான் வெண்ணீற்ற அம்மானுக் காளாயி னேன் .` ` பணிந்தும் படர்சடையான் பாதங்கள் போதால் அணிந்தும் அணிந்தவரை யேத்தத் - துணிந்தும் எந்தையார்க் காட்செய்யப் பெற்ற இதுகொலோ சிந்தையார்க் குள்ள செருக்கு `. என்ற திருமொழிகளைக் காண்க .

 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.