ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
025 திருவாரூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 7

முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்
    மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள்
பின்னை யவனுடைய ஆரூர் கேட்டாள்
    பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
    அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத்
தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்
    தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

முதலில் சிவபெருமான் என்று அவன் பெயரைக் கேட்டு, அவனுடைய பொன்வண்ணத்தைக் கேட்டு, அவனுடைய திருவாரூரைக் கேட்டு மீண்டும் அவன் திறத்து நீங்காத காதல் உடையவளாயினாள். தாயையும் தந்தையையும் அன்றே மனத்தால் துறந்தாள். உலகவர் கூறும் ` கிழவோற் சேர்தல் கிழத்திக்கு இல்லை ` என்ற நெறிமுறையை விடுத்தாள். தலைவனையே நினையும் நினைவிலே தான் செய்யும் செயல்களை அறியாது ஒழிந்தாள். கன்னி எனப்படும் தன் பெயர் நீங்கப் பெற்று அவன் உரிமை என்ற பெயரைக் கொண்டாள். அந்நங்கை அத்தலைவன் திருவடிகளை அணைந்து தனக்கென ஒன்றின்றி அவன் வழியளாய் ஒழிந்தாள்.

குறிப்புரை:

இத்திருப்பாடல் திருவாரூர்ப் பெருமானது திருப்பெயரைக் கேட்டவுடனே வசமழிந்த தலையன்புடையளாய தலைவி ஒருத்தியின் தன்மையை அவள் தோழி விளங்க உரைத்து, செவிலிக்கு அறத்தொடு நின்றதாக வைத்துச் சத்திநிபாதத்து உத்தமர்களது நிலையை விளக்கியருளியது. செய்யுளாகலின் சுட்டுப்பெயர்கள் ` தலைவன் ` என்பதற்கு முன்வந்தன. நாமம், ` சிவன் ` என்பது, இச்சொற்றானே வசீகரித்தலையுணர்த்துவது என்றபடி, ` நிறைந்த மங்கலத்தினன் ` என்பது பொருள். வண்ணம், பொன் வண்ணம். ஆரூர் - எல்லாம் நிறைந்த ஊர். ` பெயர்த்தும் ` என்பதை, ` பெயர்ப்பவும் ` எனத்திரித்து, ` கேட்டவற்றை மீள நினையாது மறக்குமாறெல்லாம் செய்து அவள் மனத்தை யாம் மாற்றவும் ` என உரைக்க. இவ்வாறின்றி, ` பின்னை வண்ணங் கேட்டாள் ; பெயர்த்தும் ஆரூர் கேட்டாள் ` என முன்னே கூட்டியுரைப்பாரும் உளர் ; அவர்க்கு, ` பிச்சியானாள் ` என்பதற்கு முன்னும் ஒரு சொல் வேண்டப் படுவதாம். ` அவனுக்கு ` என்னும் நான்காவது ஏழாவதன் பொருளில் வந்தது. பிச்சி - பித்தி, நீத்தது மனத்தால் என்க. அகலிடத்தார் ஆசாரமாவது, கன்னியர் இல்வரை இகந்து செல்லாது நிற்றல். அதனை அகன்றமையாவது தானே இல்லிறந்து சென்று ஆருரை அடையத் துணிந்தமை, தன்னை மறந்தமையாவது, தலைவனையே நினையும் நினைவிலே தான் இது செய்கின்றமை அறியாதொழிந்தமை. தன் நாமமாவது, கன்னி ( நிறை அழியாதிருப்பவள் ) எனப்படுவது. ` தாள ` என்புழி இரண்டாம் வேற்றுமை இறுதிக்கண் தொக்கது. ` தாளே ` என்னும் ஏகாரம், பிறவற்றினின்று பிரித்தலின் பிரிநிலை. தலைப்பட்டாள் - அணைந்தாள். தாளைத் தலைப்பட்டமையாவது, தனக்கென ஒன்றின்றி அவன் வழியளா யொழிந்தமை. இனி, சத்திநிபாதத்தவரது நிலையை உரைக்குமிடத்து, நாமங் கேட்டல் முதலிய நான்கினையும் முறையே கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டைகூடல் என்னும் நான்குமாகவும், பின்னர் உள்ளவற்றை அணைந்தோர் தன்மையாகவும் கொள்க. நாமம் பொதுவில் உணரப்படுவது, வண்ணம் சிறப்பாக ஆய்ந்துணரப்படுவதும், பித்து அதனில் அழுந்துதலும் ஆதல் உணர்க. அன்னை திரோதான சத்தியும், அத்தன் தடத்த சிவனும் என்க. அகலிடத்தார் ஆசாரம், தன் முனைப்பில் நின்று வினைகளையீட்டியும் நுகர்ந்தும் பிறப்பிறப்புக்களில் உழலுதல். தன்னை மறத்தல், தானொரு பொருள் உண்மையையும், உண்டாகி அறிந்து நிற்றலையும் மறந்து முதல்வன் ஒருவனையே அறிந்து நிற்றல். தாள் - முதல்வனது உண்மை இயல்பு ; அஃது இன்ப வடிவினதாதல் அறிக. ` நாமம் கேட்டல் ` முதலிய நான்கையும், ` சமயம், விசேடம், நிருவாணம் ` என்னும் தீக்கைவழி, ` சரியை, கிரியை, யோகம், ஞானம் ` என்னும் நான்கு பாதங்களில் நிற்கும் நிலைகளையுணர்த்தியவாறாக உரைப்பாரும் உளர்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
एक नायिका ने प्रभु का षिव नाम सुना। उसने कौतूहलवष पूछा कि प्रभु मूर्ति का वर्ण विवरण क्या है। उसके बाद उसने पता लगाया कि प्रभु का निवास स्थान आरूर है। उसे सुनते ही वह अपना सुध बुध खो गयी और प्रभु स्मरण में बिलखने लगी। अपना नाम, अपनी स्थिति, अपना निज स्वरूप सब कुछ खो बैठी। प्रभु के श्री चरणों में ध्यान मग्न प्रभु में लीन हो गई।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
To begin with,
she heard of His name;
She heard of Moorti`s way of life;
Then she heard of His Aaroor;
Yet she became mad after Him;
She quit her mother and father that very day;
She forsook the mores of the worldly;
She became oblivious of herself;
she became nameless;
The woman was oned with the feet of her Lover.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀼𑀷𑁆𑀷𑀫𑁆 𑀅𑀯𑀷𑀼𑀝𑁃𑀬 𑀦𑀸𑀫𑀗𑁆 𑀓𑁂𑀝𑁆𑀝𑀸𑀴𑁆
𑀫𑀽𑀭𑁆𑀢𑁆𑀢𑀺 𑀬𑀯𑀷𑀺𑀭𑀼𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀯𑀡𑁆𑀡𑀗𑁆 𑀓𑁂𑀝𑁆𑀝𑀸𑀴𑁆
𑀧𑀺𑀷𑁆𑀷𑁃 𑀬𑀯𑀷𑀼𑀝𑁃𑀬 𑀆𑀭𑀽𑀭𑁆 𑀓𑁂𑀝𑁆𑀝𑀸𑀴𑁆
𑀧𑁂𑁆𑀬𑀭𑁆𑀢𑁆𑀢𑀼𑀫𑁆 𑀅𑀯𑀷𑀼𑀓𑁆𑀓𑁂 𑀧𑀺𑀘𑁆𑀘𑀺 𑀬𑀸𑀷𑀸𑀴𑁆
𑀅𑀷𑁆𑀷𑁃𑀬𑁃𑀬𑀼𑀫𑁆 𑀅𑀢𑁆𑀢𑀷𑁃𑀬𑀼𑀫𑁆 𑀅𑀷𑁆𑀶𑁂 𑀦𑀻𑀢𑁆𑀢𑀸𑀴𑁆
𑀅𑀓𑀷𑁆𑀶𑀸𑀴𑁆 𑀅𑀓𑀮𑀺𑀝𑀢𑁆𑀢𑀸𑀭𑁆 𑀆𑀘𑀸 𑀭𑀢𑁆𑀢𑁃𑀢𑁆
𑀢𑀷𑁆𑀷𑁃 𑀫𑀶𑀦𑁆𑀢𑀸𑀴𑁆𑀢𑀷𑁆 𑀦𑀸𑀫𑀗𑁆 𑀓𑁂𑁆𑀝𑁆𑀝𑀸𑀴𑁆
𑀢𑀮𑁃𑀧𑁆𑀧𑀝𑁆𑀝𑀸𑀴𑁆 𑀦𑀗𑁆𑀓𑁃 𑀢𑀮𑁃𑀯𑀷𑁆 𑀢𑀸𑀴𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মুন়্‌ন়ম্ অৱন়ুডৈয নামঙ্ কেট্টাৰ‍্
মূর্ত্তি যৱন়িরুক্কুম্ ৱণ্ণঙ্ কেট্টাৰ‍্
পিন়্‌ন়ৈ যৱন়ুডৈয আরূর্ কেট্টাৰ‍্
পেযর্ত্তুম্ অৱন়ুক্কে পিচ্চি যান়াৰ‍্
অন়্‌ন়ৈযৈযুম্ অত্তন়ৈযুম্ অণ্ড্রে নীত্তাৰ‍্
অহণ্ড্রাৰ‍্ অহলিডত্তার্ আসা রত্তৈত্
তন়্‌ন়ৈ মর়ন্দাৰ‍্দন়্‌ নামঙ্ কেট্টাৰ‍্
তলৈপ্পট্টাৰ‍্ নঙ্গৈ তলৈৱন়্‌ তাৰে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்
மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள்
பின்னை யவனுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத்
தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே


Open the Thamizhi Section in a New Tab
முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்
மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள்
பின்னை யவனுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத்
தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே

Open the Reformed Script Section in a New Tab
मुऩ्ऩम् अवऩुडैय नामङ् केट्टाळ्
मूर्त्ति यवऩिरुक्कुम् वण्णङ् केट्टाळ्
पिऩ्ऩै यवऩुडैय आरूर् केट्टाळ्
पॆयर्त्तुम् अवऩुक्के पिच्चि याऩाळ्
अऩ्ऩैयैयुम् अत्तऩैयुम् अण्ड्रे नीत्ताळ्
अहण्ड्राळ् अहलिडत्तार् आसा रत्तैत्
तऩ्ऩै मऱन्दाळ्दऩ् नामङ् कॆट्टाळ्
तलैप्पट्टाळ् नङ्गै तलैवऩ् ताळे
Open the Devanagari Section in a New Tab
ಮುನ್ನಂ ಅವನುಡೈಯ ನಾಮಙ್ ಕೇಟ್ಟಾಳ್
ಮೂರ್ತ್ತಿ ಯವನಿರುಕ್ಕುಂ ವಣ್ಣಙ್ ಕೇಟ್ಟಾಳ್
ಪಿನ್ನೈ ಯವನುಡೈಯ ಆರೂರ್ ಕೇಟ್ಟಾಳ್
ಪೆಯರ್ತ್ತುಂ ಅವನುಕ್ಕೇ ಪಿಚ್ಚಿ ಯಾನಾಳ್
ಅನ್ನೈಯೈಯುಂ ಅತ್ತನೈಯುಂ ಅಂಡ್ರೇ ನೀತ್ತಾಳ್
ಅಹಂಡ್ರಾಳ್ ಅಹಲಿಡತ್ತಾರ್ ಆಸಾ ರತ್ತೈತ್
ತನ್ನೈ ಮಱಂದಾಳ್ದನ್ ನಾಮಙ್ ಕೆಟ್ಟಾಳ್
ತಲೈಪ್ಪಟ್ಟಾಳ್ ನಂಗೈ ತಲೈವನ್ ತಾಳೇ
Open the Kannada Section in a New Tab
మున్నం అవనుడైయ నామఙ్ కేట్టాళ్
మూర్త్తి యవనిరుక్కుం వణ్ణఙ్ కేట్టాళ్
పిన్నై యవనుడైయ ఆరూర్ కేట్టాళ్
పెయర్త్తుం అవనుక్కే పిచ్చి యానాళ్
అన్నైయైయుం అత్తనైయుం అండ్రే నీత్తాళ్
అహండ్రాళ్ అహలిడత్తార్ ఆసా రత్తైత్
తన్నై మఱందాళ్దన్ నామఙ్ కెట్టాళ్
తలైప్పట్టాళ్ నంగై తలైవన్ తాళే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මුන්නම් අවනුඩෛය නාමඞ් කේට්ටාළ්
මූර්ත්ති යවනිරුක්කුම් වණ්ණඞ් කේට්ටාළ්
පින්නෛ යවනුඩෛය ආරූර් කේට්ටාළ්
පෙයර්ත්තුම් අවනුක්කේ පිච්චි යානාළ්
අන්නෛයෛයුම් අත්තනෛයුම් අන්‍රේ නීත්තාළ්
අහන්‍රාළ් අහලිඩත්තාර් ආසා රත්තෛත්
තන්නෛ මරන්දාළ්දන් නාමඞ් කෙට්ටාළ්
තලෛප්පට්ටාළ් නංගෛ තලෛවන් තාළේ


Open the Sinhala Section in a New Tab
മുന്‍നം അവനുടൈയ നാമങ് കേട്ടാള്‍
മൂര്‍ത്തി യവനിരുക്കും വണ്ണങ് കേട്ടാള്‍
പിന്‍നൈ യവനുടൈയ ആരൂര്‍ കേട്ടാള്‍
പെയര്‍ത്തും അവനുക്കേ പിച്ചി യാനാള്‍
അന്‍നൈയൈയും അത്തനൈയും അന്‍റേ നീത്താള്‍
അകന്‍റാള്‍ അകലിടത്താര്‍ ആചാ രത്തൈത്
തന്‍നൈ മറന്താള്‍തന്‍ നാമങ് കെട്ടാള്‍
തലൈപ്പട്ടാള്‍ നങ്കൈ തലൈവന്‍ താളേ
Open the Malayalam Section in a New Tab
มุณณะม อวะณุดายยะ นามะง เกดดาล
มูรถถิ ยะวะณิรุกกุม วะณณะง เกดดาล
ปิณณาย ยะวะณุดายยะ อารูร เกดดาล
เปะยะรถถุม อวะณุกเก ปิจจิ ยาณาล
อณณายยายยุม อถถะณายยุม อณเร นีถถาล
อกะณราล อกะลิดะถถาร อาจา ระถถายถ
ถะณณาย มะระนถาลถะณ นามะง เกะดดาล
ถะลายปปะดดาล นะงกาย ถะลายวะณ ถาเล
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မုန္နမ္ အဝနုတဲယ နာမင္ ေကတ္တာလ္
မူရ္ထ္ထိ ယဝနိရုက္ကုမ္ ဝန္နင္ ေကတ္တာလ္
ပိန္နဲ ယဝနုတဲယ အာရူရ္ ေကတ္တာလ္
ေပ့ယရ္ထ္ထုမ္ အဝနုက္ေက ပိစ္စိ ယာနာလ္
အန္နဲယဲယုမ္ အထ္ထနဲယုမ္ အန္ေရ နီထ္ထာလ္
အကန္ရာလ္ အကလိတထ္ထာရ္ အာစာ ရထ္ထဲထ္
ထန္နဲ မရန္ထာလ္ထန္ နာမင္ ေက့တ္တာလ္
ထလဲပ္ပတ္တာလ္ နင္ကဲ ထလဲဝန္ ထာေလ


Open the Burmese Section in a New Tab
ムニ・ナミ・ アヴァヌタイヤ ナーマニ・ ケータ・ターリ・
ムーリ・タ・ティ ヤヴァニルク・クミ・ ヴァニ・ナニ・ ケータ・ターリ・
ピニ・ニイ ヤヴァヌタイヤ アールーリ・ ケータ・ターリ・
ペヤリ・タ・トゥミ・ アヴァヌク・ケー ピシ・チ ヤーナーリ・
アニ・ニイヤイユミ・ アタ・タニイユミ・ アニ・レー ニータ・ターリ・
アカニ・ラーリ・ アカリタタ・ターリ・ アーチャ ラタ・タイタ・
タニ・ニイ マラニ・ターリ・タニ・ ナーマニ・ ケタ・ターリ・
タリイピ・パタ・ターリ・ ナニ・カイ タリイヴァニ・ ターレー
Open the Japanese Section in a New Tab
munnaM afanudaiya namang geddal
murddi yafanirugguM fannang geddal
binnai yafanudaiya arur geddal
beyardduM afanugge biddi yanal
annaiyaiyuM addanaiyuM andre niddal
ahandral ahalidaddar asa raddaid
dannai marandaldan namang geddal
dalaibbaddal nanggai dalaifan dale
Open the Pinyin Section in a New Tab
مُنَّْن اَوَنُدَيْیَ نامَنغْ كيَۤتّاضْ
مُورْتِّ یَوَنِرُكُّن وَنَّنغْ كيَۤتّاضْ
بِنَّْيْ یَوَنُدَيْیَ آرُورْ كيَۤتّاضْ
بيَیَرْتُّن اَوَنُكّيَۤ بِتشِّ یاناضْ
اَنَّْيْیَيْیُن اَتَّنَيْیُن اَنْدْريَۤ نِيتّاضْ
اَحَنْدْراضْ اَحَلِدَتّارْ آسا رَتَّيْتْ
تَنَّْيْ مَرَنْداضْدَنْ نامَنغْ كيَتّاضْ
تَلَيْبَّتّاضْ نَنغْغَيْ تَلَيْوَنْ تاضيَۤ


Open the Arabic Section in a New Tab
mʊn̺n̺ʌm ˀʌʋʌn̺ɨ˞ɽʌjɪ̯ə n̺ɑ:mʌŋ ke˞:ʈʈɑ˞:ɭ
mu:rt̪t̪ɪ· ɪ̯ʌʋʌn̺ɪɾɨkkɨm ʋʌ˞ɳɳʌŋ ke˞:ʈʈɑ˞:ɭ
pɪn̺n̺ʌɪ̯ ɪ̯ʌʋʌn̺ɨ˞ɽʌjɪ̯ə ˀɑ:ɾu:r ke˞:ʈʈɑ˞:ɭ
pɛ̝ɪ̯ʌrt̪t̪ɨm ˀʌʋʌn̺ɨkke· pɪʧʧɪ· ɪ̯ɑ:n̺ɑ˞:ɭ
ˀʌn̺n̺ʌjɪ̯ʌjɪ̯ɨm ˀʌt̪t̪ʌn̺ʌjɪ̯ɨm ˀʌn̺d̺ʳe· n̺i:t̪t̪ɑ˞:ɭ
ˀʌxʌn̺d̺ʳɑ˞:ɭ ˀʌxʌlɪ˞ɽʌt̪t̪ɑ:r ˀɑ:sɑ: rʌt̪t̪ʌɪ̯t̪
t̪ʌn̺n̺ʌɪ̯ mʌɾʌn̪d̪ɑ˞:ɭðʌn̺ n̺ɑ:mʌŋ kɛ̝˞ʈʈɑ˞:ɭ
t̪ʌlʌɪ̯ppʌ˞ʈʈɑ˞:ɭ n̺ʌŋgʌɪ̯ t̪ʌlʌɪ̯ʋʌn̺ t̪ɑ˞:ɭʼe·
Open the IPA Section in a New Tab
muṉṉam avaṉuṭaiya nāmaṅ kēṭṭāḷ
mūrtti yavaṉirukkum vaṇṇaṅ kēṭṭāḷ
piṉṉai yavaṉuṭaiya ārūr kēṭṭāḷ
peyarttum avaṉukkē picci yāṉāḷ
aṉṉaiyaiyum attaṉaiyum aṉṟē nīttāḷ
akaṉṟāḷ akaliṭattār ācā rattait
taṉṉai maṟantāḷtaṉ nāmaṅ keṭṭāḷ
talaippaṭṭāḷ naṅkai talaivaṉ tāḷē
Open the Diacritic Section in a New Tab
мюннaм авaнютaыя наамaнг кэaттаал
муртты явaнырюккюм вaннaнг кэaттаал
пыннaы явaнютaыя аарур кэaттаал
пэярттюм авaнюккэa пычсы яaнаал
аннaыйaыём аттaнaыём анрэa ниттаал
аканраал акалытaттаар аасaa рaттaыт
тaннaы мaрaнтаалтaн наамaнг кэттаал
тaлaыппaттаал нaнгкaы тaлaывaн таалэa
Open the Russian Section in a New Tab
munnam awanudäja :nahmang kehddah'l
muh'rththi jawani'rukkum wa'n'nang kehddah'l
pinnä jawanudäja ah'ruh'r kehddah'l
peja'rththum awanukkeh pichzi jahnah'l
annäjäjum aththanäjum anreh :nihththah'l
akanrah'l akalidaththah'r ahzah 'raththäth
thannä mara:nthah'lthan :nahmang keddah'l
thaläppaddah'l :nangkä thaläwan thah'leh
Open the German Section in a New Tab
mònnam avanòtâiya naamang kèètdaalh
mörththi yavaniròkkòm vanhnhang kèètdaalh
pinnâi yavanòtâiya aarör kèètdaalh
pèyarththòm avanòkkèè piçhçi yaanaalh
annâiyâiyòm aththanâiyòm anrhèè niiththaalh
akanrhaalh akalidaththaar aaçha raththâith
thannâi marhanthaalhthan naamang kètdaalh
thalâippatdaalh nangkâi thalâivan thaalhèè
munnam avanutaiya naamang keeittaalh
muuriththi yavaniruiccum vainhnhang keeittaalh
pinnai yavanutaiya aaruur keeittaalh
peyariththum avanuickee piccei iyaanaalh
annaiyiaiyum aiththanaiyum anrhee niiiththaalh
acanrhaalh acalitaiththaar aasaa raiththaiith
thannai marhainthaalhthan naamang keittaalh
thalaippaittaalh nangkai thalaivan thaalhee
munnam avanudaiya :naamang kaeddaa'l
moorththi yavanirukkum va'n'nang kaeddaa'l
pinnai yavanudaiya aaroor kaeddaa'l
peyarththum avanukkae pichchi yaanaa'l
annaiyaiyum aththanaiyum an'rae :neeththaa'l
akan'raa'l akalidaththaar aasaa raththaith
thannai ma'ra:nthaa'lthan :naamang keddaa'l
thalaippaddaa'l :nangkai thalaivan thaa'lae
Open the English Section in a New Tab
মুন্নম্ অৱনূটৈয় ণামঙ কেইটটাল্
মূৰ্ত্তি য়ৱনিৰুক্কুম্ ৱণ্ণঙ কেইটটাল্
পিন্নৈ য়ৱনূটৈয় আৰূৰ্ কেইটটাল্
পেয়ৰ্ত্তুম্ অৱনূক্কে পিচ্চি য়ানাল্
অন্নৈয়ৈয়ুম্ অত্তনৈয়ুম্ অন্ৰে ণীত্তাল্
অকন্ৰাল্ অকলিতত্তাৰ্ আচা ৰত্তৈত্
তন্নৈ মৰণ্তাল্তন্ ণামঙ কেইটটাল্
তলৈপ্পইটটাল্ ণঙকৈ তলৈৱন্ তালে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.