ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
018 திருப்பூவணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பதிக வரலாறு :

ஆளுடைய அரசர் , திருவாலவாயினின்றும் போந்து திருப்பூவணத்தையடைந்து திருக்கோயிலினுட் சென்றபொழுது . நெடியவனுக்கும் அறிவரியவராகிய இறைவர் நேரே தோன்றக் கண்டு இறைஞ்சி , அத்தோற்றத்தை யெல்லாம் தோன்ற விரித்துப் பணிந்து பாடியருளியது இத் திருப்பதிகம் . ( தி .12 திருநாவு . புரா . 407) குறிப்பு : இத்திருப்பதிகம் சிவபிரானை உள்ளத்துள் நன்கு உள்கி உய்தற்கு , அவனது திருவுருவத்தின் இயல்பினைப் பலபட வகுத்து அருளிச்செய்யப்பட்டது . ` ஆருருவ உள்குவார் உள்ளத்துள்ளே அவ்வுருவாய் நிற்கின்ற அருளும் , தோன்றும் ` என்று இறுதித் திருப்பாடலில் அருளிச்செய்த திருக்குறிப்பு ஓர்ந்துணரத்தக்கது . இறைவன் , தன்னை உள்குவார் உள்ளத்துள் விளங்கிநின்று பயன் தருதற்கு ஏற்ப , இதன்கண் உள்ள தொடர்கள் எல்லாம் , ` தோன்றும் ` என்னும் முடிபுடையனவாகவே அருளிச்செய்யப்பட்டன . சிவவழி பாட்டில் இத்திருத்தாண்டகங்கள் கலாநியாசத்திற்கு உரியதாதல் உணர்க . இவ்வருமை நோக்கி , இத்திருப்பதிகம் , அகத்தியர் தேவாரத் திரட்டுள் , ` சிவனது திருவுருவம் ` என்னும் பொருட்டுச் சிறந்தெடுத்து வைக்கப்பட்டுள்ளது .

 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.